கல்யாண கச்சேரி ஆல்பம் சாங் coke studio tamil
சினிமா

’2K + 90ஸ் கிட்ஸ்’ எல்லாரும் காலி.. ‘மாலை டும்டும்’ பாடலுக்கு பின் கலக்கும் ‘கல்யாண கச்சேரி’ பாடல்!

மாலை டும்டும் பாடலுக்கு பிறகு தற்போது வெளியாகியிருக்கும் ‘கல்யாண கச்சேரி’ ஆல்பம் சாங் கல்யாணத்துல நடக்குற குட்டிகுட்டி கலாட்டாவ எல்லாம் ஒட்டுமொத்தமா கொட்டி எல்லாரையும் வைப்ல தாளம் போட வச்சிட்டு இருக்கு.

Rishan Vengai

ஒரு ஊருல ஒரு கல்யாணம் நடக்குதுனா முதல்ல மக்கள் அதை தெரிஞ்சிக்குற அல்லது வெளிப்படுத்த நினைக்குற ஒரே வழி பாட்டு மூலமாக மட்டும் தான் இருக்கும். வாசல்ல கட்டிவச்ச வாழைமரம் தோரணம் எல்லாம் அந்த வீட்ட பார்க்குறவங்களுக்கு மட்டும் தான் அதை கல்யாண வீடா காட்டுமே தவிர, கட்டுற ரேடியோசெட்டும் கலைக்கட்டுற பாட்டு சத்தமும் மட்டும்தான் “ஊருல என்ன கல்யாணமா? யார் வீட்டுல கல்யாணம்? என்ன படிச்சியிருக்காரு மாப்ள? எந்த ஊரு பொண்ணு? எவ்ளோ வசதி?”னு பட்டியல் நீண்டுட்டே போயி அந்த கல்யாணத்தை ஊருல இருக்க மொத்த பேருகிட்டயும் கொண்டுபோய், உள்ளூரு வெளியூருனு அப்படியே கல்யாண கலையை கொண்டு சேர்க்குறது பாட்டு தாங்க..

ஆரம்ப காலத்துல இருந்து இப்போ வரைக்கும் மணப்பெண்ண அழைச்சிட்டு வரதுக்கு “வாராயோ என் தோழி வாராயோ” பாடலை ஒலிக்கவிடுறத நம்ம மக்கள் வழக்கமாவே வச்சிட்டு வராங்க, அந்தளவு பாட்டு கல்யாணத்தோட பிணைக்கப்பட்டிருக்கு. அது அப்படியே படிப்படியா வளர்ந்து இப்போ கல்யாண வீட்டுலயே பாட்டு + டான்ஸ்னு முழுக்க முழுக்க வைப்போடவே சுத்திட்டு இருக்காங்க இந்தகாலத்து இளசுங்க.

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம்

அந்தவகைல சமீபத்துல வந்த ‘மாலை டும்டும்’ பாடலும் ”கல்யாணம் முடிக்காது நம்ம கச்சேரி தொடங்காது”னு பேர் வச்சாலும் பாடலோட ரீமேக் சாங்கும் அனைத்து தலைமுறையையும் கவர்ந்தது மட்டுமில்லாம 2K கிட்ஸயும் வைப்ல கட்டிப்போட்டது. அப்படி ஒரு வைப்ப தான் சமீபத்துல வெளிவந்திருக்குற ‘கல்யாண கச்சேரி’ ஆல்பம் பாடலும் கொடுத்து ரசிகர்களை கட்டிப்போட ஆரம்பிச்சிருக்கு.

பாட்டுல வைப் இருக்கா?? பாட்டே வைப் தான்..

கோக் ஸ்டுடியோ தமிழ் வெளியிட்டிருக்க இந்த பாடல், கபில் கபிலன், சித்தாரா கிருஷ்னகுமார், ஜஸ்டின் பிரபாகரன் மூனு பேரும் சேர்ந்து பாடியிருக்காங்க. இந்த பாட்டு ஒரு கல்யாணத்துல நடக்குற “சைட் அடிங்க டானு பசங்க மற்றும் பொண்ணுங்களோட கலாட்டா, புது மாப்ள + புது பொண்ணோட மைண்ட் வாய்ஸ், லவ் மேர்ரேஜ்ஜா அல்லது அர்ரேஞ்சுடு மேர்ரேஜ்ஜா எது பெஸ்ட்டுன்ற பொதுவான கலாட்டானு ஆரம்பிச்சு, எந்த கல்யாணமோ முதல்ல சோற போடுங்க பானு நம்ம சிங்கிள் பசங்களோட வைப்னு” ஒட்டுமொத்தமா பெருசுங்க, இளசுங்கனு எல்லாரோட வைப்பயும் கிளறிவிட்டு தாளம் போட வச்சிருக்கு.

பாடல் வரிகள் எல்லாம் அனைத்து தலைமுறையும் கவரும் விதமாகவும், பாடகர்களின் தேர்வு வரிகளுக்கு ஏற்ற முதிர்ச்சியை தரும்படியாகவும், ஒட்டுமொத்தமா பாட்டு நம்ம வாழ்க்கைல சந்திச்ச சுவாரசியமான கல்யாண நிகழ்வுகளை தட்டி எழுப்புற ஒரு வைப்ப கொடுத்திருக்கு.. ரசிகர்கள் இந்த பாட்ட வரவேற்க ஆரம்பிச்சிருக்காங்க..