சினிமா

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்

webteam

தனியார் தொலைக்காட்சியில் பாடகியாக அறிமுகமான இரு குழந்தைகள் ‘கடைக்குடி சிங்கம்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி உள்ளனர்.

குட்டி பாடகி தனுஸ்ரீ தெரியாதவர்கள் இல்லை. தமிழ் குடும்பங்களின் செல்லபிள்ளை அவர். அதே போல் அவருடைய தம்பி தேஜ் தன் அக்காவுக்கு நிகரான திறமை கொண்டவர். இவர்கள் இருவரும் விரைவில் வெளியாக உள்ள கடைக்குட்டி சிங்கம் படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக நடித்துள்ளனர். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இப்படத்தில் நடித்த அனுபவத்தை பற்றி சூப்பர் சிங்கர் பாடகியான தனுஸ்ரீயிடம் தன் அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். “சத்யராஜ் அங்கிள், கார்த்தி அங்கிள், சாயிஷா ஆண்டி, பிரியா ஆண்டி எல்லோரும் என்னை செல்லமாக கவனித்து கொண்டார்கள். படபிடிப்பு தளத்தில் நான் சில நேரங்களில் பாடினேன். அதை பார்த்து எல்லோரும் எனக்கு முத்தம் குடுத்தார்கள்” என்று கூறியிருக்கிறார். படபிடிப்பு தளத்தில் யார் அதிகமாக குறும்பு பண்ணுவார்கள்? என்று கேட்டதற்கு, “தம்பிதான் அதிக குறும்பு செய்வான் என்றும், நான் எப்போதும் அமைதியாகதான் இருப்பேன்” என்றும் கூறியிருக்கிறார்.  

இசையமைப்பாளர் இமான் தனுஸ்ரீயை வருங்காலங்களில் தன்னுடைய இசையில் பாட வைப்பதாக கூறியுள்ளதாக சொல்லும் தனுஸ்ரீ, இந்த படத்தில் பாடாதது பற்றி வருத்தமில்லை என்றும் கூறியிருக்கிறார்.