jawan Twitter
சினிமா

தொட்டுவிடும் தூரத்தில் ரூ.1000 கோடி - பதான் வசூல் சாதனையை முறியடித்த ஜவான்!

ஷாரூக்கான் நடிப்பில் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ஜவான் திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடி ரூபாய் என்ற வசூல் சாதனையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

Rajakannan K

பாலிவுட் நடிகர் ஷாரூக்கானுக்கு இந்த வருடம் மிகவும் சாதகமான ஒன்றாக மாறியிருக்கிறது. குடியரசுத் தினத்தையொட்டி இந்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி வெளியான பதான் திரைப்படமும், அட்லி இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான ஜவான் திரைப்படமும் பாலிவுட் உலகையே மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வைத்துள்ளது.

உள் நாட்டில் சம்பவம் செய்த பதான் - ஜவான்!

ஷாருக்கானின் பதான் மற்றும் ஜவான் ஆகிய இரண்டு படங்களும் ஒரே ஆண்டில் உள்நாட்டிலேயே 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. 17ஆவது நாளான இன்றுடன் ஜவான் திரைப்படம் சுமார் ரூ546 கோடி வசூல் செய்துள்ளதாக தெரிகிறது. இது பதான் படத்தின் மொத்த வசூலான ரூ.543 கோடியை காட்டிலும் 3 கோடி ரூபாய் அதிகம் ஆகும்.

Jawan

18ஆவது நாளான இன்று உள்நாட்டில் அதிவேகமாக ரூ.500 கோடி வசூலை எட்டியை திரைப்படம் என்ற சாதனையை ஜவான் படைத்துள்ளது. இந்த வருடம் வெளியான பதான் மற்றும் கடார் 2 ஆகிய படங்கள்தான் இந்த சாதனையை நிகழ்த்தியது. சனிக்கிழமை ஆன நேற்று 12-13 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது. கடார் 2 திரைப்படமும் வெற்றிகரமாக ஓடி 500 கோடியை கடந்து தற்போது ரூ.522 கோடி என்ற அளவில் உள்ளது. பதான் வசூலை எட்ட அதற்கு இன்னும் 20 கோடிகள் மட்டும் மீதம் உள்ளது.

இரண்டு 1000 கோடி படங்களை கொடுத்த ஒரே நடிகராகும் ஷாருக்!

ஜவான் திரைப்படம் உலக அளவில் 1000 கோடி ரூபாய் வசூலை தொட இன்னும் 30-40 கோடிகளே மீதமுள்ளது. நேற்று வரை சுமார் 960 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமையான இன்று கணிசமான அளவிற்கு வசூல் வரும் என்பதால் இன்றைய நாளின் முடிவில் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டிவிடும் என்றே தெரிகிறது.

ஜவான் இந்த சாதனையை நிகழ்த்தும் போது இந்திய நடிகர் ஒருவர் ஆயிரம் கோடிகளுக்கு மேல் இரண்டு முறை வசூல் செய்தவர் என்ற மைல்கல்லை ஷாருக் எட்டுவார்.