சினிமா

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’

sharpana

உலக புகழ்பெற்ற நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் தனுஷின் ’ஜகமே தந்திரம்’  இடம்பெற்றுள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ 17 மொழிகளில் நேற்று வெளியாகி இருக்கிறது. ஈழத்தமிழர் கேங்ஸ்டர் கதை என்பதால் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகின்றது. இந்நிலையில், இப்படத்தின் போஸ்டர்கள் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அதிகம் மக்கள் தொகை கொண்ட மாநிலமான நியூயார்க்கில்தான் இந்த டைம்ஸ் சதுக்கம் அமைந்துள்ளது. உலகின் முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றான டைம்ஸ் சதுக்கத்திற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள்.

இங்குதான், புகழ்மிக்க ஐ.நா சபையும், நியூயார்க் பங்குச்சந்தையும் அமைந்துள்ளது. அதோடு, நியூயார்க்கில்தான் உலகம் முழுக்க புலம்பெயந்தவர்கள் அதிகளவில் வசிக்கிறார்கள். இதனால், வணிக வளாகங்கள், மால்கள் நிறைந்த டைம்ஸ் சதுக்கம் எப்போதும் கூட்டத்துடன் பரபரப்பாகவே காட்சியளிக்கும். அப்படியொரு, புகழ்மிக்க டைம்ஸ் சதுக்கத்தில் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.