சினிமா

ஜிஎஸ்டி ஸ்டிரைக்: ’இவன் தந்திரன்’ இயக்குனர் கண்ணீர் பேட்டி!

webteam

ஜிஎஸ்டி வரியோடு தமிழக அரசு நகராட்சி வரியும் விதிக்க முடிவு செய்துள்ளதால் வரும் திங்கள்கிழமை முதல் திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படும் என தமிழ் திரைப்பட வர்த்தக சபை அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று வெளியான ’இவன் தந்திரன்’  படத்தின் இயக்குனர் ஆர்.கண்ணான், கண்ணீர் மல்க பேசியுள்ள ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 


அதில் இயக்குனர் ஆர். கண்ணன் கூறியிருப்பதாவது:
அனைவருக்கும் வணக்கம். நான் டைரக்டர் ஆர்.கண்ணன் பேசுறேன். ‘இவன் தந்திரன்’ படத்தின் இயக்குனர். இப்ப படம் ரிலீஸ் ஆகி, சக்சஸ் புல்லா போயிட்டிருக்கு. அதுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. ஒரு இயக்குனரா என் சகோதரர் பிரின்ஸ் உட்பட பலருக்கும் நன்றி. சில விஷயங்களை ஷேர் பண்ணலாம்னு ஆசைப்படறேன். வரும் திங்கட்கிழமை முதல் திடீர்னு ஸ்டிரைக்குன்னு சொல்றாங்க. எந்த முன்னறிவிப்பும் இல்லாம இப்படி திடீர்னு ஸ்டிரைக் அறிவிச்சா, எப்படி? இந்தப் படத்துக்காக வாங்குன கடனை எப்படி அடைக்கிறது? எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. விக்ரமன் சார், செல்வமணி சார், சேரன் சார், சமுத்திரக்கனி ஏதாவது பண்ணுங்க. யாருகிட்ட போய் பேசறதுன்னு தெரியல.  படம் நல்லாயிருக்குன்னு கொண்டாடுறாங்க. நல்ல விமர்சனங்கள் வருது. இந்த நேரத்துல இப்ப திடீர்னு ஸ்டிரைக் வந்தா என்ன பண்றதுன்னு புரியல.
இவ்வாறு அழுதபடி கூறியுள்ளார்.