சினிமா

உண்மையாக இருக்குமோ?: செல்வராகவனின் சந்தேகம்!

உண்மையாக இருக்குமோ?: செல்வராகவனின் சந்தேகம்!

sharpana

இயக்குநர் செல்வராகவன் ஒரு சந்தேகத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

தமிழின் முன்னணி இயக்குநரான செல்வராகவன் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “ சமீபத்தில் கேட்டது! “உங்களை வீட்டில் மனைவி எப்படி நடத்துகிறாரோ அப்படித்தான் வெளியுலகம் நடத்தும். உண்மையாக இருக்குமோ?” என்று யோசிக்கும் ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் நடிகை சோனியா அகர்வாலை முதல் திருமணம் செய்து பின்பு விவாகரத்தாகி அவருடைய உதவி இயக்குநர் கீதாஞ்சலியை காதல் திருமணம் செய்துகொண்டார். இத்தம்பதிகளுக்கு ஏற்கனவே, ஒரு மகள், ஒரு மகன் இருக்கும் நிலையில் கீதாஞ்சலி மூன்றாவது குழந்தைக்கு விரைவில் அம்மாவாகவுள்ளார்.

சமீபத்தில் அவர், மூன்றாவது குழந்தை வரும் ஜனவரி மாதம் பிறக்கப்போகிறது என்று அறிவித்திருந்தது  குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செல்வராகவனின் அந்த ட்விட்டர் பதிவுக்கு நகைச்சுவையாக ரசிகர்கள் பதிலளித்து வருகிறார்கள்.“