சினிமா

ஸ்வாதி கொலை வழக்கு படத்தை வெளியிடக்கூடாது: தந்தை எதிர்ப்பு

ஸ்வாதி கொலை வழக்கு படத்தை வெளியிடக்கூடாது: தந்தை எதிர்ப்பு

webteam

ஐடி பெண் ஸ்வாதி கொலை வழக்கு படத்தை வெளியிடக் கூடாது என்று அவரது தந்தை டிஜிபியிடம் மனுக் கொடுத்துள்ளார். 
ஐடி பெண் ஸ்வாதி கடந்த ஆண்டு நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேசனில் கொலை செய்யப்பட்டதில் உள்ள முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை. பல்வேறு ஐயங்களை ஏற்பத்திய இந்த கொலைவழக்கில் மீனாட்சிபுரத்தில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில் அவர் சிறைக்குள்ளேயே மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. 
 பல மர்மங்கள் அடங்கிய இந்த சம்பவங்களை தொகுத்து ’சுவாதி கொலைவழக்கு’ என்ற படத்தை இயக்கி வருகிறார் எஸ்.டி.ரமேஸ். விசாரணை அதிகாரியாக அஜ்மல் நடிக்கிறார்.  சமீபத்தில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது.  இந்நிலையில், கொலைசெய்யப்பட்ட ஸ்வாதியின் தந்தை டிஜிபியை சந்தித்து மனு ஒன்றை அளித்திருக்கிறார். அதில் இந்தப்படத்தை வெளியிடக்கூடாது. ஏற்கெனவே  மகளை இழந்து வாடும்  நிலையில் இந்தப்படம் வெளியானால் எங்கள் குடும்பத்தினருக்கு மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் என அந்த மனுவில் அவர் தெரிவித்து இருக்கிறார். 
ஸ்வாதி படம் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்...