'என் செல்லப்பேரு ஆப்பிள்' படம் மூலம் பிரபலமான நடிகை முமைத்கானிடம் போதைப் பொருள் விவகாரம் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது.
டார்க்நெட் என்ற தடை செய்யப்பட்ட ஆன்லைன் தளத்தின் மூலம் போதைப்பொருள் விற்பனையும், விநியோகமும் நடந்திருப்பது தெலுங்கு திரை உலகை தொடர்ந்து ஆட்டிப்படைத்து வருகிறது. இதுதொடர்பாக, போக்கிரி, பிசினஸ்மேன் உள்ளிட்ட படங்களை இயக்கிய பூரி ஜெகந்நாத், ஒளிப்பதிவாளர் ஷ்யாம் கே நாயுடு, பாகுபலி 2 படத்தில் நடித்த சுப்பா ராஜூ, நடிகர்கள் தருண் குமார், நவ்தீப் கலைஇயக்குநர் தர்மா ராவ், நடிகை சார்மி ஆகியோர் இதுவரை சிறப்பு விசாரணைக்குழு முன் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இவர்களிடம் குறைந்தது பத்துமணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், இன்று முமைத் கான் விசாரணை குழு முன் ஆஜரானார். அவரிடம் தீவிர விசாரணை நடந்தது.
முமைத்கான் தமிழில் "செல்லப்பேரு ஆப்பிள் " "என் பேரு மீனாகுமாரி" உள்ளிட்ட பாடல்களில் நடனம் ஆடியுள்ளார். தெலுங்கில் மட்டுமின்றி இந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இதனிடையே, போதைப்பொருள் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராவதற்காக தெலுங்கு பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவில் இருந்து அவர் வெளியேறினார்.