கார்த்திக் குமார், சுசித்ரா pt web
சினிமா

கார்த்திக் குமார் குறித்து பேச பாடகி சுசித்ராவுக்கு இடைக்கால தடை

நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவுக்கு இடைக்காலத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பாடகி சுசித்ராவுக்கு எதிராக ரூ.1 கோடி மானநஷ்டஈடுகோரி கார்த்திக் குமார் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

PT WEB

நடிகர் கார்த்திக் குமார், சென்னை உயர்நீதிமன்றத்தில் பாடகி சுசித்ரா தெரிவித்துவரும் கருத்துக்களுக்கு தடை கேட்டும், மான நஷ்ட வழக்கு தொடுத்தும், அதற்கான தொகையும் வேண்டுமென வழக்கு தொடுத்திருந்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பாலாஜி முன்பாக இந்த விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணையில் கார்த்திக் குமார் குறித்து பேச பாடகி சுசித்ராவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

ஏற்கெனவே பாடகி சுசித்ரா யூடியூப் தளங்களுக்கு அளித்த நேர்காணலில், நடிகர் கார்த்திக் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து அவதூறாக பேசியதாகவும், இதனால் தங்களுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது, எனவே சுசித்ரா ஒரு கோடி மானநஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதில்தான் நீதிமன்றம் தற்போது இத்தகைய தீர்ப்பை வழங்கியுள்ளது.

பாடகி சுசித்ரா தரப்பில் இருந்து வழக்கறிஞர்கள் ஆஜராகினர். அதில் கார்த்திக் குமார் குறித்து அவதூறான கருத்துக்கள் எதையும் தெரிவிக்கவில்லை என சுசித்ரா தரப்பு வழக்கறிஞர்கள் பேசியதாக தெரிகிறது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் தற்போது இடைக்கால தடை விதித்துள்ளது.