சினிமா

'World’s first movie without...' - பார்த்திபனின் அடுத்த புராஜெக்ட் என்ன?

'World’s first movie without...' - பார்த்திபனின் அடுத்த புராஜெக்ட் என்ன?

webteam

தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாளி பார்த்திபன். வெற்றி தோல்விகளைத் தாண்டி இயங்கிக் கொண்டேயிருக்கும் வெகு சிலரில் ஒருவர். நகைச்சுவையில் கில்லாடி. அதை ரசிப்பதில் அதையும் தாண்டி. இந்தக் கட்டுரையையும் வாசித்துவிட்டு ஒரு Long laugh போடுவார் என்பதில் எங்களுக்கு சந்தேகமேயில்லை.

இரவின் நிழலுக்கு அடுத்து, என்ன செய்வார் பார்த்திபன் என்ற ஒரு ஜாலி கற்பனையே இது.

பார்த்திபனின் அலுவலகம் அமைதியாக இருக்கிறது. அடுத்து என்ன என்று அவர் அஸிஸ்டெண்ட்ஸ் ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள். உள்ளிருக்கும் ஒரு பெட்டியைத் திறக்கிறார் பார்த்திபன். அதனுள்தான் அவரின் ஐடியாக்கள் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. முதல் ஐடியாவை எடுக்கிறார்.

அஸிஸ்டென்ட்: என்ன சீட்டு பாஸ்?

பார்த்திபன்: நான் என்ன கிளியாடா?

அஸிஸ்டென்ட்: எதிர்காலத்தை கணிக்கிறதுலாம் கிளின்னா நீங்களும்...

(அவனை முறைக்கிறார்)

பார்த்திபன்: கதை இல்லாம எடுத்துட்டோம். பட்ஜெட்டே இல்லாமலும் கிரவுட் ஃபண்டிங்க்ல எடுத்துட்டோம். இப்ப எடிட்டிங்கும் இல்லாம எடுத்துட்டோம்.

அஸிஸ்டென்ட்: ஆடியன்ஸும் இல்லாம கூட..

என மெல்லமாக சொல்ல, அந்த இடம் இன்னும் அமைதியாகிறது.

பார்த்திபன்: அடுத்து..

(எல்லோரும் மகிழ்ச்சியாக, அவரையே ஆர்வமாகப் பார்க்க...)

பார்த்திபன்: நான் இல்லாம எடுக்கலாம்னு யோசிக்கிறீங்களா?

அஸிஸ்டென்ட்: இல்லை பாஸ்

பார்த்திபன்: படத்துல எது இருக்கோ இல்லை. நான் இருப்பேன். அது ஒண்ணு போதும்.

அஸிஸ்டென்ட்: ஆமா பாஸ்

பார்த்திபன்: அடுத்து 2 ஐடியா இருக்கு. முதல் ஐடியா.. பின்னணி இசையே இல்லாம எடுக்கிறது.

அஸிஸ்டென்ட்: செம ஐடியா பாஸ்

அஸிஸ்டென்ட்: தமிழ்லயே டூலெட்ல அத பண்ணிட்டாங்க சார்

பார்த்திபன்: ஒரு சவுண்டும் இல்லாமலா?

அஸிஸ்டென்ட்: இல்லை பாஸ். பேக் கிரவுண்ட் ம்யூஸீக் மட்டும் கிடையாது. வசனமும், அட்மாஸ்பியர் சவுண்டும் இருக்கும்.

பார்த்திபன்: பின்னணி இசை மட்டும் இல்லாமதான் இப்ப எல்லா படமும் வருது

(எல்லா அஸிஸ்டெண்ட்டும் ஷாக் ஆகிறார்கள்)

பார்த்திபன்: ராஜா சார் தவிர மத்தவங்க போடுறதெல்லாம் பின்னணி இசையே இல்லைன்றேன்

(என்றதும் தான் நிம்மதி அடைகிறார்கள்)

அஸிஸ்டென்ட்: பாஸ் கொரியால கிம் கு டுக்ன்னு

பார்த்திபன்: மொபைலா?

(எல்லோரும் மீண்டும் ஷாக் ஆக)

பார்த்திபன்: இது ஜோக்குப்பா.. அவர் டைரக்டர்ன்னு எனக்கும் தெரியும்

அஸிஸ்டென்ட்: அவர் இத பண்ணிட்டாரு.

பார்த்திபன்: அப்ப அடுத்த ஐடியா...

(மீண்டும் எல்லோரும் ஆர்வமாக)

பார்த்திபன்: கேமரா இல்லாம படம் பண்றோம்.

அஸிஸ்டென்ட்: எப்படி பாஸ்?

பார்த்திபன்: எப்படியும் நம்ம படத்தை 20 பேர்தான் பாக்குறான். அதனால தியேட்டர்ல நாமளே போய் நடிக்கிறோம்.

அஸிஸ்டென்ட்: செம பாஸ்

அவன் காதில் ஒருத்தன் ‘அதுக்கு பேருதான நாடகம்?’ என கிசுகிசுக்கிறான்.

இன்னொரு அஸிஸ்டெண்ட்: ஆனா எல்லா ஆர்ட்டிஸ்ட்டையும் ஒண்ணு சேத்து..

பார்த்திபன்: நான் ஒருத்தன் தான் நடிக்கிறேன்.

பார்த்திபன்: ஒத்த செருப்பையும், இரவின் நிழலையும் மிக்ஸ் பண்ணி ஒத்த நிழல்னு பேரு வைக்கிறோம்

அஸிஸ்டென்ட்: செம பாஸ்

போஸ்டர் தயராகிறது.

World’s first movie without camera..

அஸிஸ்டென்ட்: செம பாஸ்..

பார்த்திபன்: நீதான் பாஸ்ன்ற.. மத்தவன்லாம் ஃபெயிலுன்றான்.