சினிமா

ஸ்மூல் செயலியில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தக் கூடாது என நோட்டீஸ்

ஸ்மூல் செயலியில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தக் கூடாது என நோட்டீஸ்

webteam

ஸ்மூல் செயலியில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தக் கூடாது என நோட்டீஸ்

செல்ஃபோனில் ஸ்மூல் ஆப் மூலம் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தக் கூடாது என்று, அந்நிறுவனத்துக்கு இளையராஜாவின் காப்புரிமை ஆலோசகர்  நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

ஸ்மூல் என்பது பொழுதுபோக்கு அம்சங்களான பாடல்களுடன் கூடிய செல்போன் செயலியாகும். இந்த செயலியை டவுன்லோடு செய்து கொண்டால் இதன் மூலம் பாடல்களை கேட்டு ஜோடியாகவும் பாட முடியும். இந்நிலையில் இளையராஜாவின் பாடல்களை ஸ்மூல் ஆப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று அவரது காப்புரிமை ஆலோசகர் பிரதீப் குமார் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அனுமதி பெறாமல் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துவது தவறானது. எனவே அந்த நிறுவனத்தின் டேட்டா பேஸிலிருந்து அவரின் பாடல்களை நீக்க வேண்டும் என்று அந் நிறுவனத்திற்கு மெயில் அனுப்பி உள்ளாதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இசையமைப்பாளரின் அனுமதி இன்றி அவர்களின் பாடல்களை பயன்படுத்துவது காப்புரிமை சட்டத்துக்கு எதிரானது என்று பிரதீப் கூறியுள்ளார்.