சினிமா

”விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” - ரஜினியை நலம் விசாரித்தார் முதல்வர்

”விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்” - ரஜினியை நலம் விசாரித்தார் முதல்வர்

webteam

மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ரஜினியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.  

ரத்த அழுத்தத்தில் மாறுபாடு காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “ரஜினிகாந்துக்கு கொரோனா பாதிப்பு குறித்த எந்த அறிகுறியும் இல்லை. ரத்த அழுத்தம் சீராகும்வரை ரஜினிகாந்த் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார்” எனத் தெரிவித்தது.

இந்நிலையில், இன்று காலை மீண்டும் அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம் ”ரஜினியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், முழு ஓய்வு எடுக்க வேண்டும். ரத்த அழுத்தம் காரணமாக ரஜினிகாந்த் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால், அவரை யாரும் பார்க்க அனுமதி இல்லை. அவரது ரத்த அழுத்தம் தொடர்ந்து மருத்துவர்களால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ சோதனையில் கவலைப்படும் வகையில் எதுவும் இல்லை என கண்டறியப்படவில்லை.

ரத்த அழுத்தம் நேற்றைவிட கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் ரத்த அழுத்தத்தின் அளவு அதிகமாகவே உள்ளது. பரிசோதனைகள், ரத்த அழுத்தக் காட்டுப்பாடு ஆகிய முடிவுகளின் அடிப்படையில் எப்போது டிஸ்சார்ஜ் என்று மாலையில் முடிவு எடுக்கப்படும்” என்று ஹைதரபாத் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையில் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொலைபேசி வாயிலாக ரஜினியை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் ரஜினி விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திப்பதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

<blockquote class="twitter-tweet"><p lang="ta" dir="ltr">உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அன்புச்சகோதரர் திரு.ரஜினிகாந்த் <a href="https://twitter.com/rajinikanth?ref_src=twsrc%5Etfw">@rajinikanth</a> அவர்கள் விரைவில் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.</p>&mdash; O Panneerselvam (@OfficeOfOPS) <a href="https://twitter.com/OfficeOfOPS/status/1342728155853803521?ref_src=twsrc%5Etfw">December 26, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின், தெலங்கான ஆளுநர் தமிழசை செளந்தர் ராஜன், நடிகர் பவன் கல்யாண் உள்ளிட்ட பலர் ரஜினியை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.