சினிமா

எரிச்சலூட்டும் காமெடியை தவிர்க்கிறேன்: சிவகார்த்திகேயன்

எரிச்சலூட்டும் காமெடியை தவிர்க்கிறேன்: சிவகார்த்திகேயன்

webteam

எரிச்சலூட்டும் காமெடி வசனங்களை என் படங்களில் இருந்து தவிர்த்து வருகிறேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வேலைக்காரன்’திரைப்படம் இருவேறு விதமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. வழக்கமாக காமெடி ஹீரோவாக இருந்து அவர் தீவிரமாக வசனம் பேசியதை பலரும் விரும்பவில்லை. ஆனால் இந்தப் புது விதமான முயற்சியை வேறுசில தரப்பினர் ஆதரித்து கொண்டாடி வருகிறார்கள். 

இந்நிலையில் சிவகார்த்திகேயன், “எரிச்சலூட்டும் காமெடி வசனங்களையும் ஆபாசமான காட்சிகளையும் என் படங்களில் இடம்பெறக்கூடாது என்று தவிர்க்கிறேன்” என்று கூறியுள்ளார். மேலும் அவரிடம் திரைக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “பத்தாண்டுகள் என நான் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் அதில் என்னுடைய 5 ஆண்டு கால தொலைக்காட்சி வாழ்க்கையையும் சேர்த்து கொள்ள வேண்டும். நான் மிக அர்ப்பணிப்போடு சினிமா உலகத்தோடு பின்புலமாக  இருந்திருக்கிறேன். அப்படி பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இன்னும் வெற்றியடைந்துவிட்டதாக நினைக்கவில்லை. நான் வெற்றி பெற்றுவிட்டதாக நம்பவும் இல்லை. நான் அதை தோளில் சுமக்கவும் இல்லை. நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். அதோடு இந்த அழுத்தத்தை மிக தீவிரமாக எடுத்து கொள்கிறேன். அதை மதிக்கிறேன். மேலும் நான் முயற்சி செய்து சொந்தமாக கற்று கொண்டும் இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.