சினிமா

6 மாதத்தில் 97 படங்கள் ரிலீஸ்: ஆனால் ஹிட்?

6 மாதத்தில் 97 படங்கள் ரிலீஸ்: ஆனால் ஹிட்?

webteam

தமிழ் சினிமாவில் கடந்த ஆறு மாதத்தில் சுமார் 97 படங்கள் வெளியாகியுள்ளன. ஆனால், பாகுபலி 2 படம் மட்டுமே வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளது.

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் அதிக படங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. திருட்டு விசிடி உள்ளிட்ட விவகாரங்களால் சினிமா தொழில் பெரும் பாதிப்பை சந்தித்து வந்தாலும் படங்கள் தயாரிக்கப்படுவது மட்டும் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இருநூறு படங்களுக்கு மேல் ரிலீஸ் ஆகிவருகிறது. இந்த ஆண்டும் அதிக படங்கள் வெளியாகும் என்று தெரிகிறது. 

கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை சுமார் 97 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளன. இதில் விஜய்யின் ’பைரவா’, சூர்யாவின் ’சிங்கம் 3’, ஜெயம் ரவியின் ’போகன்’, ‘பாகுபலி 2’  உட்பட சில பெரிய பட்ஜெட் படங்களும் அடங்கும். ஆனால் இந்த 97 படங்களில் வெற்றியை குவித்த படங்கள் இரண்டு தான். அது, ’பாகுபலி 2’-வும் ’துருவங்கள் 16’ படமும்! 

வசூல் சாதனைப் படைத்துள்ள இந்தப் படத்தைத் தவிர மற்றப் படங்களில் சிறு பட்ஜெட் படங்களான, அதே கண்கள், குற்றம் 23, கவண், தொண்டன், சரவணன் இருக்க பயமேன், ப.பாண்டி, மொட்ட சிவா கெட்ட சிவா ஆகியவை பார்டரில் பாஸ் செய்துள்ளன. 

அடுத்த எதிர்ப்பார்ப்பில், மெகா பட்ஜெட் படங்களான அஜீத்தின் விவேகம், விஜய்யின் மெர்சல், கமலின், விஸ்வரூபம் 2 படங்கள் இந்த வருட கோட்டாவில் வரிசையில் இருக்கின்றன. இந்தப் படங்கள் மற்றும் தெலுங்கு, ஆங்கில டப்பிங் படங்களையும் சேர்த்து 250 படங்களுக்கு மேல் இந்த வருடம் ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது. ஆனால், அதில் எத்தனை மெகா ஹிட்டாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.