சினிமா

இந்தியில் ’கபிர் சிங்’ ஆனது ’அர்ஜுன் ரெட்டி’!

இந்தியில் ’கபிர் சிங்’ ஆனது ’அர்ஜுன் ரெட்டி’!

webteam

’அர்ஜுன் ரெட்டி’  படத்தின் இந்தி ரீமேக்கிற்கு ’கபிர் சிங்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். 

தெலுங்கில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், ’அர்ஜுன் ரெட்டி’ . விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே, ராகுல் ராமகிருஷ்ணா உட்பட பலர் நடித்திருந்தனர். சந்தீப் வங்கா இயக்கி இருந்தார். ராஜூ தோட்டா ஒளிப்பதிவு செய்திருந்தார்.

(விஜய் தேவரகொண்டா)

இந்த படம் தமிழில் வர்மா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேகா ஹீரோயின். ஈஸ்வரி ராவ், ரைஸா உட்பட பலர் நடிக்கின்றனர். பாலா இயக்குகிறார். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து விட்டது. டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. 

இந்நிலையில் இதன் இந்தி ரீமேக் இப்போது தயாராகி வருகிறது. இதில் ஷாகித் கபூர் ஹீரோவாக நடிக்கிறார். அவர் ஜோடியாக கியரா அத்வானி நடிக்கிறார். தெலுங்கில் இயக்கிய சந்தீப் வங்காவே இந்தியிலும் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் தொடங்கியது. இந்திக்காக படத்தின் கதையில் சில மாற்றங்கள் செய்துள்ளனர்.

(கியரா அத்வானி)

இதுபற்றி இயக்குனர் சந்தீப் வங்கா கூறும்போது, ‘படத்துக்கு சரியான டைட்டிலை தேடிக் கொண்டிருந்தோம். கடைசியில், கபிர் சிங் என்ற கேரக்டரின் பெயரையே வைத்துவிட்டோம். ’அர்ஜூன் ரெட்டி’யின் அதே குணாதிசயத்தை கபிர் சிங்கிடமும் பார்க்கலாம்.

மும்பை, டெல்லி, முசோறியில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. வித்தியாசமான நான்கு லுக்-களில் ஷாகித் வருகிறார். இதற்காக கடந்த 3 மாதமாக தன்னை தயார்படுத்தினார் அவர்’ என்றார்.