சினிமா

பாலியல் புகார்: சரணடைந்த ஹாலிவுட் தயாரிப்பாளருக்கு ஜாமின்

பாலியல் புகார்: சரணடைந்த ஹாலிவுட் தயாரிப்பாளருக்கு ஜாமின்

webteam

தங்களை வலுக்கட்டாயமாகப் பாலியல் வன்கொடுமை செய்ததாக சுமார் 80 நடிகைகள் கூறிய புகாரை அடுத்து, போலீஸில் சரணடைந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் ஜாமின் விடுவிக்கப்பட்டார். 

ஆஸ்கர் விருது வென்ற புகழ் பெற்ற ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டீன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாகவும், அவர்களுடன் தவறாக நடக்க முயற்சித்ததாகவும், நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளி‌யிட்டது. பிற கு பிரபல ஹாலிவுட் நடிகைகளான ஏஞ்சலினா ஜோலி, கைனெத் பால்ட்ரோ, காரா டெலவிங்னி உள்பட பல நடிகைகள், வெயின்ஸ்டீன் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை தெரிவித்தனர். சுமார் 80 நடிகைகள் அவர் மீது பாலியல் புகார் கூறியிருந்தனர். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில்  #MeToo என்ற ஹேஷ் டேக் உருவாக்கப் பட்டது. அதில் நடிகைகள் பலர் புகார் கூறி வந்தனர்.

(லூசியா இவான்ஸ்)

சமீபத்தில் நடந்து முடிந்த கான் திரைப்பட விழாவில் பேசிய இத்தாலி நடிகை ஆசியா அர்ஜெண்டாவும் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்தி ருந்தார். இதற்கிடையே நடிகையாகும் கனவில் இருந்த லூசியா இவான்ஸ் என்பவரை, கடந்த 2004-ம் ஆண்டு வலுக்கட்டாயமாக ஹார்வி பாலி யல் வன்கொடுமை செய்துள்ளார். இதை அவர் வெளிப்படையாக புகார் தெரிவித்தார். இவர் மற்றும் மற்றொரு பெண் கொடுத்த புகாரின் அடிப் படையில் ஹார்வி மீது வழக்குப் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து நியூயார்க் போலீஸிடம் அவர் நேற்று சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலை ஆனார். இந்த வழக்கு ஜூலை 30- தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.