சினிமா

'கர்ப்பமாக இருக்கும் சோனம் கபூரின் பிரைவசிக்கு மதிப்பு கொடுங்கள் - ஹர்ஷ்வர்தன் கபூர்

'கர்ப்பமாக இருக்கும் சோனம் கபூரின் பிரைவசிக்கு மதிப்பு கொடுங்கள் - ஹர்ஷ்வர்தன் கபூர்

JustinDurai

சோனம் கபூரின் பிரைவசிக்கு மதிப்பு கொடுப்பது முக்கியம் எனக் கருத்து தெரிவித்துள்ளார் அவரது சகோதரர் ஹர்ஷ் வர்தன் கபூர்.  

பாலிவுட் நடிகை சோனம் கபூரும் தொழிலதிபரான ஆனந்த் அஹூஜாவும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது சோனம் கபூர் கர்ப்பமாக இருக்கிறார். கர்ப்பமான வயிறுடன் இருக்கும் சோனம் கபூரின் புகைப்படங்கள்  சமீபத்தில் இணையத்தில் வைரல் ஆனது. இந்த நிலையில் சோனம் கபூரின் தந்தையான நடிகர் அனில் கபூரும்,  சோனம் கபூரின் சகோதரரான ஹர்ஷ்வர்தன் கபூரும் ஊடகப் பேட்டி ஒன்றில் சோனம் கபூரின் தாய்மை குறித்து மனம்திறந்து பேசினர்.  

அதுபற்றி நடிகர் அனில் கபூர் கூறுகையில், ''இப்போது நாங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். குழந்தை நலமாக பிறக்க வேண்டும் என்று விழிமேல் விழி வைத்து காத்திருக்கிறோம். இப்போது எங்கள் உணர்வுகளை வார்த்தைகளில் விளக்குவது மிகவும் கடினம். ஆனால் நிச்சயமாக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறோம்'' என்றார்.

சோனம் கபூரின் சகோதரர் ஹர்ஷ் வர்தன் கபூர் கூறுகையில், “சோனம்கபூர் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள விரும்புவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சோனம் ஒரு பெரிய ஆளுமை. எனவே, வெளிப்படையாக எல்லோரும் அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்கள். ஆனால், இது இரண்டு பேருக்கும் மிகவும் நெருக்கமான மற்றும் தனிப்பட்ட அனுபவம் என்று நான் நினைக்கிறேன். மேலும் அவர்களின் தனியுரிமையை ஒரு விதத்தில் நாம் அனைவரும் மதிப்பது முக்கியம் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் நீங்கள் ஒருவரை நேசிக்கும்போது அவர்கள் நீங்கள் விரும்பும் ஒருவரை உருவாக்குகிறார்கள். அது புனிதமானது. இது யாருக்கும் எதையும் நிரூபிப்பதற்காகவோ அல்லது உலகத்துக்காகவோ அல்ல. எனவே, அவர்களுக்கும் அந்த இடத்தை கொடுத்தால் நன்றாக இருக்கும்'' என்று கூறினார்.

அனில் கபூர் மற்றும் ஹர்ஷ்வர்தன் கபூர் இருவரும் தங்களின் அடுத்த திரைப்படமான 'தார்' வெளியீட்டிற்காக காத்திருக்கின்றனர். ராஜ் சிங் சவுத்ரி இயக்கிய இப்படத்தை அனில் கபூர் பிலிம் கம்பெனி தயாரித்துள்ளது. இப்படம் வரும் மே 6 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.

இதையும் படிக்க: 'இதுபோன்ற திரைப்படங்கள் தமிழில் ஏன் வருவதில்லை' - இளையராஜா பேச்சு