ஹாரிபாட்டர் நாவல் வெளியிடப்பட்டு இன்றுடன் 20 வருடங்களை பூர்த்தியாகிறது. இதனை சிறப்பிக்கும் விதமாக ஃபேஸ்புக், ஸ்டேட்டஸில் மாயாஜாலத்தை கொண்டுவந்துள்ளது.
சிறுவர்கள் முதல் முதியவர்கள் மத்தியில் மாயாஜால மந்திர கதைகளை மிக தத்ரூபமாக வெளிப்படுத்திய கதை ‘ஹாரிபாட்டர்’ நாவல். நாவலை எட்டு பகுதிகளாக படமாக்கி இளைஞர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற படம் ‘ஹாரிபாட்டர்’.
காட்சிகளில் வேகம், தொழில்நுபடத்தில் பிரம்மாண்டம் பெரிய நடிகர் இல்லாவிட்டாலும் குழந்தைகளுக்கானகதையை மையமாகக்கொண்டு வெளிவந்த ஹாரிபாட்டர். தீய மந்திர சக்திகளை எதிர்த்துப் போராடும் கதையின் நாயகனான ஹாரிபாட்டரை மையமாக வைத்து இந்த கதை எழுதப்பட்டது. படத்தின் அடுத்த தொடருக்கான எதிர்பார்ப்பும், த்ரிலிங்கும் அடுத்த பகுதியை எப்பொழுது பார்ப்போம் என குழந்தைகளை ஈர்க்க தொடங்கியது இந்த நாவலின் கதை. இதில் மாயாஜால வேலைகளுக்கு பஞ்சமே இருக்காது. கிராபிக்ஸ்லும், 3டியிலும் பல புதுமைகள் செய்த படம் ஹாரிபாட்டர். இறுதி பகுதியான ஹாரிபாட்டர் டெட்த்லி ஹாலோஸ் மட்டும் இரண்டு பகுதிகளாக வெளிவந்தது. குழந்தைகள் மத்தியில் பிரம்மாண்டத்தையும், பிரமிப்பையும் ஏற்படுத்திய இந்த நாவல் வெளியிடப்பட்டு இன்றுடன் 20 வருடங்கள் பூர்த்தி ஆகிறது. இவ்வளவு பழமையான கதையா? என ஆச்சர்ய பட்டாலும் இன்றும் இதன் சுவாரசியம் மாறவில்லை என்பது தான் நிதர்சனமாக உண்மை.
ஜே.கே.ரௌலிங் என்பவரால் எழுதப்பட்ட 'ஹாரி பாட்டர்' நாவல் 26 ஜூன் 1997 இல் வெளியிடப்பட்டது. இந்நாளை இளைஞர்கள் மத்தியில் நினைவுப்படுத்தும் விதமாகவும், நாவலை சிறப்பிக்கும் விதமாகவும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஹாரிபாட்டர் மற்றும் அந்த கதையில் வரும் கதாபாத்திரங்களான க்ரிஃ பின்டார், ஸ்லிதரின், ஹஃப்புள் பஃப், ராவேன் கிளே போன்ற பெயர்களை டைப் செய்து போஸ்ட் செய்தால் அந்த எழுத்துக்களின் வண்ணங்கள் மாறும் அத்துடன் மாயாஜால ஸ்டிக் ஒன்று வந்து மேஜிக் செய்வது போல் ஃபேஸ்புக் பக்கத்தை அலங்கரிக்கிறது.