சினிமா

ட்விட்டரில் ட்ரெண்டாகும் தனுஷின் மாரி2

rajakannan

தனுஷ்-யுவன் கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், மாரி2 படம் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

இயக்குநர் பாலாஜி மோகன், தனுஷ், அனிருத் கூட்டணியில் 2015-ம் ஆண்டு வெளிவந்த மாரியில் காஜல் அகர்வால், விஜய் யேசுதாஸ், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் இசை ரீதியாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்போது 'மாரி 2' படத்தின் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், மாரி2 படக்குழுவில் புதிதாக வரலட்சுமி இணைந்துள்ளார். இயக்குநர் பாலாஜி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை  அறிவித்துள்ளார். மாரி2 படத்தில் இணைந்தது குறித்து வரலட்சுமியும் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன் வரலட்சுமி இணைந்த செய்தி ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.