சினிமா

“இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா”- சிவாஜிக்காக ட்விட்டரில் கமல் பதிவு

Rasus

நடிகர் திலகம் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சிவாஜி கணேசனுக்கு இன்று 92-வது பிறந்த நாள். அவர் மறைந்து பல வருடங்கள் ஆன போதிலும், அவரது நடிப்பால் இன்றும் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்.

இந்நிலையில் சிவாஜிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,  “ நடிகர் திலகத்தின் நடிப்பை போல அவரது உடலுக்கும் மரணமே கிடையாது என மற்ற அப்பாவி ரசிகர்களை போல நானும் நம்பினேன். அவர் இறந்து இத்தனை வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் அவரின் ஏராளமான ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு, ‘அவர் நம்முடன் இல்லையே’ என்ற எண்ணத்தில் இருந்து மீண்டு வர முடியவில்லை. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அப்பா” என பதிவிட்டுள்ளார். இதனைப்போல சிவாஜியின் ஏராளமான ரசிகர்களும், அவரின் புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.