சினிமா

’கேதார்நாத்’ படத்துக்கு தடை விதிக்க முடியாது: குஜராத் நீதிமன்றம்

webteam

சுஷாந்த் சிங் ராஜ்புத், சாரா அலி அகான், நிதிஷ் பரத்வாஜ் உட்பட பலர் நடித்துள்ள இந்தி படம், 'கேதார்நாத்'. அபிஷேக் கபூர் இயக்கியுள்ள இந்தப் படம், 2013 ஆண்டு கேதார்நாத்தில் ஏற்பட்ட பெரு மழை வெள்ளப் பாதிப்புகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

நாளை வெளியாகும் இந்தப் படத்தில்,’முத்தக்காட்சிகள் அதிகம் இருக்கின்றன. இந்து -முஸ்லிம் காதலை மையப்படுத்தி படம் எடுக்கப் பட்டுள் ளது. இது லவ் ஜிகாத்தை ஊக்குவிப்பது போல இருக்கிறது. காதல்தான் புனிதப் பயணம் என்கிற வாசகம் இடம்பெற்றுள்ளது. இது, இந்து மதத் தையும் அம்மக்களின் நம்பிக்கையின் அடையாளமாகத் தெரியும் கேதார்நாத்தையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. அதனால் இந்தப் படத்துக்கு தடை விதிக்க வேண்டும். மீறி வெளியிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடைபெறும்’ என்று இந்து அமைப்புகள் கூறிவருகி ன்றன.

இந்நிலையில் இந்தப் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்று சர்வதேச இந்து சேனா என்ற அமைப்பின் தலைவர் பிரகாஷ் ராஜ்புத் என்பவர் குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், இந்த படம் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாகவும் அதிக முத்தக் காட்சிகள் இடம்பெற்றுள்ளது என்றும் அதனால் படத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.எஸ்.தாவே தலைமையிலான அமர்வு, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இது பப்ளிசிட்டிக்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு என்றும் வழக்கு தொடுத்தவருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.

இந்நிலையில் இந்தப் படம் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க உத்தராகண்ட் மாநில அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. மா‌நில‌ சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மகராஜ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நான்கு பேர் கொண்ட குழு, இந்தப் படம் குறித்தும், குற்றச்சாட்டுகள் குறித்தும் விசாரித்து அறிக்கை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

குழு அளிக்கும் அறிக்கையைப் பொறுத்தே உத்தராகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத் திரைப்படத்தை திரையிட அனுமதிப்பது குறித்து முடி வெடுக்கப் படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.