களத்தில் மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருபவர்களை ஒடுக்க வழக்குகளை அரசு பயன்படுத்துவதாக ஆவணப்பட இயக்குனரும் சமூக செயற்பாட்டாளருமான திவ்யபாரதி கூறியுள்ளார்.
கக்கூஸ் ஆவணப்பட இயக்குநரும், சமூக செயற்பாட்டாளருமான திவ்யபாரதி மதுரை மாவட்டம் முடகாத்தான் கிராமத்திலுள்ள அவரது வீட்டில் இன்று கைது செய்யப்பட்டார். 2009ஆம் ஆண்டு நடத்திய போராட்டம் தொடர்பான வழக்கில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர் மதிச்சியம் காவல்நிலையத்தில் 7 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இது குறித்து கருத்துத் தெரிவித்த திவ்யபாரதி, வழக்கை உரிய முறையில் நடத்திய பிறகும் தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சமூக செயல்பாட்டாளர்களை ஒடுக்க அரசு முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார்.