The GOAT Twitter
சினிமா

"GOAT படத்தை 7 காட்சிகள் திரையிட திட்டம்.. ’விஜய்’தான் தடுக்கணும்” - காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார்

நடிகர் விஜய்யின் goat திரைப்படத்திற்கு திரையரங்குகளில் கூடுதல் டிக்கெட் கட்டணம் என்பதையும், கூடுதல் காட்சிகள் வெளியிடப்படுகிறதா என்பதையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் தேவராஜன் புகார் அளித்துள்ளார்.

ஜெ.அன்பரசன்

நடிகர் விஜய்யின் goat திரைப்படத்திற்கு திரையரங்குகளில் கூடுதல் டிக்கெட் கட்டணம் என்பதையும், கூடுதல் காட்சிகள் வெளியிடப்படுகிறதா என்பதையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் தேவராஜன் புகார் அளித்துள்ளார்.

The GOAT

வருகிற 5-ம் தேதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அந்தப் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளது.

இந்த நிலையில் கோட் திரைப்படத்தை வெளியிடும் திரையரங்குகள், அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக டிக்கெட் விலையில் விற்பனை செய்ய இருப்பதாகவும், நீதிமன்ற உத்தரவை மீறி திரையரங்குகளில் ஏழு காட்சிகள் திரையிட திட்டமிட்டு இருப்பதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

கோட் திரைப்படம் மூலமாக திரையரங்குகள் அளவுக்கு அதிகமான கட்டணங்களை பெற்றால் அதனை உடனடியாக திருப்பி செலுத்த வேண்டும் என உத்தரவு ஒன்றை பிறப்பிக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

கோட் படம்

நடிகர் விஜய் இது போன்ற குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க உடனடியாக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரையரங்க நிர்வாகிகளுக்கும் இது குறித்து அறிவுறுத்த வேண்டும் எனவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கூடுதல் கட்டணம் மற்றும் கூடுதல் காட்சிகளை வெளியிடும் திரையரங்குகள் மற்றும் நடிகர் விஜய் மீது குண்டர் சட்டத்தின் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் சமூக ஆர்வலர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.