soori and vetri maaran pt
சினிமா

"நம்மல சர்ப்ரைஸ் பண்றதுக்கு எப்போதும் சூரி ரெடி" -கருடன் சக்ஸஸ் மீட் விழாவில் வெற்றி மாறன் பேச்சு

"சூரியோட கமிட்மெண்ட் ரொம்ப நல்லாயிருந்தது. அவருக்கு உடம்பு சரியில்லாம இருந்தது. இருந்தும் நடிச்சு கொடுத்தார். பிரேக் எடுக்கல. நிறைய ரிஸ்க் எடுத்தார். நம்மல சர்ப்ரைஸ் பண்றதுக்கு எப்போதும் சூரி ரெடி" என்று இயக்குநர் வெற்றி மாறன் பேசினார்.

webteam

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து திரையரங்குகளிில் வெற்றிகரமாக ஓடிவரும் கருடன் படத்தின் சக்ஸஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் குமார், டைரக்டர் துரை செந்தில்குமார், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், சசிகுமார், வெற்றி மாறன், ஒளிப்பதிவாளர் வில்சன், ஆகியோர் கலந்து கொண்டு படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Garudan movie

தயாரிப்பாளர் குமார்

கருடன் படத்தை வெற்றிகரமாக மாற்றியது வெற்றிமாறன் சார். இந்த ப்ராஜெக்ட் சைஸ் பெருசா மாறுனதுக்கும் வெற்றிமாறன் சார்தான் காரணம். படக்குழு ரொம்ப சப்போர்ட் பண்ணாங்க. சூரி அண்ணா படத்தோட ஆரம்பத்திலிருந்து இருந்தார். 14 வருஷமா சூரி அண்ணா கூட இருக்கேன். அவருடைய தம்பிக்கு சமமாக என்னை நினைச்சார்.

டைரக்டர் துரை செந்தில்குமார்

ஒரு படம் அதுக்கு தேவையானதை அதுவே அமைச்சுக்கும்னு பாலு மகேந்திரா சார் சொல்லுவார்னு சொல்லுவாங்க. இந்தப் படம் அப்படித்தான் அமைந்தது. இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றி. என்னுடைய டீம் மெம்பர்ஸூக்கும் நன்றி. தமிழ்நாட்டு மக்கள் ரசனைக்கும் பெரிய நன்றி.

இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்

என்ன கண்ணுங்களா நல்லாயிருக்கீங்களான்னு எல்லோரும் கேட்குற அளவுக்கு படத்தில் கேரக்டர் கொடுத்த டைரக்டர் துரை செந்திலுக்கு நன்றி. சூரி, சசிகுமார், வெற்றிமாறனுக்கு நன்றி. என் நடிப்பை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி. பல ப்ரஷர் வேலைக்களுக்கு இடையில் கூப்பிடுவாங்க. வந்து பார்த்தா மதுரை பாஷையில் எல்லோரும் பேசுவாங்க. ரொம்ப சூப்பரனா ஸ்க்ரிப்ட்.

துரை செந்தில், வெற்றி ரெண்டு பேரையும் பார்த்தா பொறாமையா இருக்கு. குருநாதரை அப்படி நேசிக்க கூடியவங்க. பாலு மகேந்திரா ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போது வெற்றி கூடவே இருந்து குளிக்க வெச்சு பார்த்துக்கிட்டான். பாலு சார் ஆசீர்வாதம்தான் இப்படத்தின் வெற்றி. தமிழகமே திரும்பி பார்க்குற மாதிரி அசத்தலான கதாபாத்திரம் கொடுத்து சூரியை நடிக்க வெச்ச வெற்றிக்கு நன்றி.

Garudan movie

அண்ணா வெற்றி மாதிரி, சூரியை நல்ல படியாக காட்டியிருக்கார் துரை. சினிமால போலி நண்பர்கள் நிறைய பேர் இருப்பாங்க. தோல்வி வரும் போது விட்டுட்டு ஓடிருவாங்க. இப்படியெல்லாம் இல்லாம சூரிக்கா என்ன வேணும்னாலும் பண்ணுவேன்னு நடிக்க வந்த சசிகுமாருக்கு நன்றி. ரொம்ப சூப்பரா நடிச்சிருந்தார். படம் பார்த்துட்டு கண் கலங்கிட்டேன். தயாரிப்பாளர் மூஞ்சியை கூட பார்த்ததில்ல. ஆனால், பிரம்மாண்டமா நண்பருக்காக தோள் கொடுத்து நின்னார்.

Vetrimaran, Soori, Sasikumar

சசிகுமார்

ரொம்ப சந்தோஷம். குமார் சக்ஸஸ் மீட்டுக்கு கூப்பிட்டார். ஓடாத மீட்டுக்குதான் சக்ஸஸ் மீட் வைக்குறாங்க. சோ, நன்றி மீட்னு சொல்லுனு சொன்னேன். தோல்வியை ஏத்துக்க பயப்படுறாங்க. வெற்றிக்கு பல காரணம் சொல்லுவாங்க. கருடன் படத்தின் வெற்றிக்கு பல காரணம் சொல்றாங்க. ஆனா, புரொடியூசர் குமார்தான் முக்கிய காரணம். ஏன்னா, இவர்தான் முழுக்க டிசைன் பண்ணார். படம் ஜெயிக்கும்னு இவர்தான் முழு நம்பிக்கை வெச்சிருந்தார். ஓடிடி கிடைக்காத போதுகூட நம்பிக்கையா இருந்தார்.

ஒரு படத்தை தியேட்டர்ல ஆடியன்ஸ் பார்ப்பாங்கனு நம்பிக்கை வந்திருக்கு. எல்லோருக்கும் நன்றி. சூரிக்கு நல்லது செய்ய வந்தேன். ஆனா, எனக்கு நல்லது ஆகிருச்சு. சூரி இன்னும் பரோட்டா சூரி இல்ல. கதையின் நாயகன்தான் சூரி. மக்கள் தூக்கி கொண்டாடும்போது பயம் வரும் அதை காப்பாத்துனு சொன்னேன்.

Vetrimaran

வெற்றிமாறன்

கருடன் வெற்றிக்கு தமிழ் ஆடியன்ஸ் மீடியாவுக்குதான் வெற்றி. இன்னைக்கு காலத்தில் ஓடிடி நம்பிதான் பிசினஸ்னு இருந்ததை மக்கள் மாத்தியிருக்காங்க. ஒரு சந்தோஷம். இந்த இடத்துக்கு படம் வந்ததுக்கு முக்கியமான காரணம் செந்திலின் உழைப்பு. அப்புறம் புரொடியூசர் குமார். அப்புறம் படத்துக்குள்ள வந்த எல்லா ஆர்டிஸ்ட். சூரியோட கமிட்மெண்ட் ரொம்ப நல்லாயிருந்தது. அவருக்கு உடம்பு சரியில்லாம இருந்தது. இருந்தும் நடிச்சு கொடுத்தார். பிரேக் எடுக்கல. நிறைய ரிஸ்க் எடுத்தார். நம்மல சர்ப்ரைஸ் பண்றதுக்கு எப்போதும் சூரி ரெடி.