கங்கை அமரன் - இளையராஜா - வைரமுத்து புதிய தலைமுறை
சினிமா

இளையராஜாவை சாடிய வைரமுத்து... “மனுஷனுக்கு எப்போதுமே நன்றி வேணும்” - கண்டித்த கங்கை அமரன்!

PT WEB

இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களின் காப்புரிமை தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் தான் அனைவருக்கும் மேலானவன் என கருத்து தெரிவித்திருந்த இளையராஜா, பின்னர், பாடல்களில் தனது உரிமைதான் மேலானது என கூறியதாக விளக்கமளித்திருந்தார்.

இளையராஜா

இந்த சூழலில், திரைப்பட இசை வெளியிட்டு விழா ஒன்றில் பேசிய கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து, “இசையும் பாடல் வரிகளும் இணைந்தால் நல்ல பாடல் உருவாகும். சில சமயங்களில் இசையை விட மொழி சிறந்ததாகத் திகழும் சந்தர்ப்பங்கள் உண்டு. இதைப் புரிந்துகொண்டவன் ஞானி, புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி” என பேசியிருந்தார்.

இந்தநிலையில், இளையராஜாவை வைரமுத்து அவமதித்துள்ளதாக கூறி, இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் கடுமையாக சாடியுள்ளார். ‘வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறி விட்டது’ எனவும் விமர்சித்துள்ளார்.

மேலும் தன் வீடியோவில், “மனுஷனுக்கு எப்போதுமே நன்றி வேணும். வைரமுத்து அவர்களை வாழவைத்த இளையராஜாவை, ஃபோட்டோ வைத்து அவர் கும்பிட வேண்டும். இனிமேல் வைரமுத்து அவர்களே.... இளையராஜா குறித்து நீங்கள் குற்றங்களோ குறைகளோ சொல்லுவதாக இருந்தால், அதன் விளைவுகளை நீங்கள் வேறமாதிரி சந்திக்க நேரிடும்” என்றுள்ளார்.

கங்கை அமரன் வெளியிட்ட வீடியோவை இங்கே காணலாம்: