சினிமா

பேசிருவேன், ஆனா சிக்கலாகிடும்: நடிகை

பேசிருவேன், ஆனா சிக்கலாகிடும்: நடிகை

webteam

மனதில் உள்ளதை பேசுவதில் எனக்கொன்றும் பயமில்லை. ஆனால் அது எனக்குத்தான் சிக்கலைக் கொண்டு வந்து சேர்க்கும் என்று நடிகை ஃபிரீடா பின்டோ கூறினார்.

ஸ்லம்டாக் மில்லியனர் படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஃபிரீடா பின்டோ. மும்பையை சேர்ந்த இவர், இப்போது ஹாலிவுட் படங்களில் நடித்துவருகிறார். அமெரிக்காவில் வெளியாகும் டிவி.சீரியல் ஒன்றில் அரசியல்வாதியாக அவர் நடிக்கிறார்.

இது தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவரிடம், அரசியல் பற்றி பேசுவீர்களா என்று கேட்டபோது, ’பேசுவேன். மனசுல உள்ளதை சொல்றதுல எனக்கு தயக்கமோ, பயமோ கிடையாது. ஆனால், அது எனக்கே சிக்கலைக் கொண்டு வந்து சேர்க்கும்’ என்றார்.

’நான் ஆசிர்வதிக்கப்பட்டவள். அதனால்தான் ஹாலிவுட் வாய்ப்புகள் எனக்கு வந்துகொண்டிருக்கின்றன என நினைக்கிறேன். வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் சகஜம். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டிருக்கிறேன். நீங்கள் தவறுகளே செய்யவில்லை என்றால் எதையும் கற்றுக்கொள்ள முடியாது’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.