சினிமா

காஷ்மீரில் ராஸி படப்பிடிப்பு முடிந்தது: அலியா பட் கொண்டாட்டம்

காஷ்மீரில் ராஸி படப்பிடிப்பு முடிந்தது: அலியா பட் கொண்டாட்டம்

webteam

காஷ்மீர் பகுதியில் நடந்து வந்த ராஸி படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அப்படத்தின் நாயகி அலியா பட் மற்றும் படக்குழுவினர் இன்ஸ்ட்ராகிராமில் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

பாலிவுட் பாடலாசிரியர் குல்ஸார் மகளான மேக்னா குல்ஸார் இயக்கும் இந்திப் படம் ராஸி. இதில் அலியாபட் நாயகியாக நடித்து வருகிறார். விக்கி கெளஷல் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வந்தது. இன்றுடன் அந்தப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. 

ஆருஷி கொலை வழக்கை மையமாக வைத்து மேக்னா எடுத்த  த்ரில்லர் படம் தல்வார். இப்படத்திற்கு விமர்சகர்களும் திரை ரசிகர்களும் அதிக வரவேற்பை வாரி வழங்கி இருந்தனர். வசூல் ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.  இவர் அடுத்து இயக்கி வரும் படம் `ராஸி'. இந்தப் படம் அடுத்த ஆண்டு மே 18-ம் தேதி வெளியாகும் என மேக்னா தனது முகநூலில் தெரிவித்திருந்தார். மேக்னா இயக்கும் ஆறாவது படமான இதில் அலியா பட், `மஸான்', 'ராமன் ராகவ்’ ’2.0' என பல படங்களில் நடித்த விக்கி கௌஷல் ஆகியோர் நடிக்கிறார்கள். 

ஹரிந்தர் எஸ்.சிக்கா எழுதிய 'காலிங் செமத்' என்கிற நாவலைத் தழுவி இப்படம் தயாராகி வருகிறது. பாகிஸ்தான் ராணுவ அதிகாரியாக விக்கி கௌஷலும், காஷ்மீர் பெண்ணாக அலியா பட்டும் நடிக்கிறார்கள். த்ரில்லர் திரைப்படமாக உருவாகிவரும் இப்படம் பஞ்சாப், மும்பை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது.இந்நிலையில்  காஷ்மீர் படப்பிடிப்பு இன்றுடன் முடிந்துள்ளது. 1971-ம் ஆண்டு  இந்திய - பாகிஸ்தான் போரின் சமயம் நடந்த நிஜ சம்பவத்தை கருவாக கொண்டு உருவாகிறது 'ராஸி' என்பது குறிப்பிட தக்க செய்தியாகும்.