GOAT Spark Song X
சினிமா

"எங்க விஜய் அண்ணாவ என்னயா பண்ணி வச்சிருக்கீங்க?" - 'GOAT' பட கெட்டப்பிற்கு எழும் கடுமையான விமர்சனம்!

Rishan Vengai

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து உருவாகியிருக்கும் படம் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்). இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம் கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தி கோட் பட பாடல்

இந்த படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், மகன் விஜயை ஹாலிவுட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் இளமையானவராக காட்டி இருக்கிறார் வெங்கட்பிரபு. எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது முழுவீச்சில் கிராபிக்ஸ் பணிகள் உள்பட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்றுவருகிறது.

Spark Song

இப்படத்தின் முதல் பாடலான 'விசில் போடு' வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இரண்டாவது பாடலான 'சின்ன சின்ன கண்கள்' விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் 3வது பாடல் ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில், ஸ்பார்க் என தொடங்கும் மூன்றாவது பாடல் இன்று வெளியாகியுள்ளது.

என்னயா பண்ணி வச்சிருக்கிங்க..

கோட் படத்தின் மூன்றாவது பாடலான ‘SPARK லிரிக்கல் வீடியோ’ வெளியான சிறிது நேரத்திலேயே விஜயின் “De Aging" கெட்டப்பானது படு விமர்சனத்தை பெற்றுவருகிறது. ’பாட்டு தான் நல்லா இல்லனு பார்த்தா, எங்க விஜய் அண்ணாவ என்னயா பண்ணிவச்சிருக்கீங்க’ என ரசிகர்கள் விரக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அரசியல் செல்வதற்கு முன்னால் வெற்றிப்படத்தோடு செல்வார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருந்துவந்த விஜய் ரசிகர்கள், தற்போது வெங்கட்பிரபு படத்துல என்னபா கலக்கி வச்சிருக்க என்றும், யுவன் சங்கர் ராஜா பழைய ராஜாவா எப்போ மாறுவீங்க, இந்த பாட்டெல்லாம் விஜய் சாருக்கு பத்தாது என்றும் பதிவிட்டு வருகின்றனர்.