நடிகை தமன்னா புதிய தலைமுறை
சினிமா

சிக்கலில் நடிகை தமன்னா.. 5 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை!

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிக்கிய HPZ TOKEN என்ற செல்போன் செயலியின் விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்றது தொடர்பாக நடிகை தமன்னாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர்.

PT WEB

HPZ TOKEN செயலி மூலம் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்து வருமானம் ஈட்டலாம் என முதலீட்டாளர்களிடம் பணமோசடி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அந்த செயலி நிறுவனம் மீது பணமோசடி வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் HPZ TOKEN செயலியின் விளம்பர நிகழ்ச்சியில் நடிகை தமன்னா பங்கேற்று பணம் பெற்றதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக, அசாம் கவுகாத்தியில் உள்ள அமலாக்கத்துறை இயக்குநரகம் அவருக்கு சம்மன் அனுப்பி இருந்தது.

இதனையடுத்து, பெற்றோருடன் அசாமிற்கு சென்ற தமன்னா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். நேற்று பிற்பகலில் ஆஜரான தமன்னாவிடம் 5 மணிநேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தமன்னாவிற்கு எதிராக குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றும் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.