சினிமா

'பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா?’ - கமல்ஹாசன்

'பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா?’ - கமல்ஹாசன்

sharpana

டயரில் தீயைக் கொளுத்தி யானை மீது வீசிய கொடூர சம்பவத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நீலகிரியில் மாவநல்லா பகுதியில் 3 மாதங்களுக்கு முன்பு யானையை காட்டுக்குள் திருப்பியனுப்ப டயரில் தீவைத்து கொளுத்தி யானை மீது வீசியதில் அதன் காது, முதுகு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. 3 மாதங்களாக முதுகில் காயங்களுடன் சுற்றித்திரிந்த யானை ஜனவரி 19ஆம் தேதி உயிரிழந்தது.

இதன், தீயில் யானை வலியால் துடிக்கும் பதைபதைக்கும் வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், தீவைத்ததாக 2 பேரை வனத்துறை கைதுசெய்துள்ளது.

இந்த கொடூர சம்பவத்திற்காக பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் “காடுகள் கொன்று நாடுகள் ஆக்கினோம். காட்டுயிர்களின் கதியை மறந்தோம். உயிரோடு எரிக்கும் வழக்கம் எப்படி வந்தது? பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா? மரணத்தைச் சுமந்துபோன யானையின் ஓலம் அலைக்கழிகிறது. காலம் தலைகுனிகிறது”