சினிமா

அமெரிக்காவில் நயன்தாரா: வாய்ஸ் கொடுக்கிறார் தீபா!

webteam

நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். இருவரும் திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. இருவரும் இப்போது அமெரிக்காவில் இருக்கின்றனர். அங்கு இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை டிவிட்டரில் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். காதல் ஜோடி அங்கிருந்தாலும் நயன் தாரா நடித்துள்ள ’இமைக்கா நொடிகள்’ படத்தின் டப்பிங் இங்கு தொடங்கியுள்ளது.

அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்தப் படத்தில் அதர்வா, இந்தி பட இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் உள்பட பலர் நடித்துள்ளனர். 

ராஜா ராணி, தனி ஒருவன், மாயா ஆகிய படங்களில் நயன்தாராவுக்கு நடிகை தீபா வெங்கட், டப்பிங் பேசினார். அந்தப் படங்களில் அவர் குரல் நன்றாக இருந்ததால், ’இமைக்கா நொடிகள்’ படத்திலும் அவரையே, நயன்தாராவுக்கு டப்பிங் பேச வைத்துள்ளனர்.