சினிமா

சீனாவில் ரீமேக் ஆன ‘த்ரிஷ்யம்’ - டிச.20ல் வெளியீடு

சீனாவில் ரீமேக் ஆன ‘த்ரிஷ்யம்’ - டிச.20ல் வெளியீடு

jagadeesh

மோகன்லால், மீனா, எஸ்தர் அனில், ஆஷா சரத், சித்திக் உட்பட பலர் நடித்துள்ள மலையாள படம், ’த்ரிஷ்யம்’. ஜீது ஜோசப் இயக்கியிருந்த இந்தப் படம் அங்கு மெகா ஹிட் ஆனது. இதையடுத்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், சிங்களம் உட்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு பெரும் வெற்றிப் பெற்றது.

இந்தி ரீமேக்கில் அஜய் தேவ்கனும், தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷூம், கன்னடத்தில் ரவிச்சந்திரனும் நடித்திருந்தார்கள். அந்த மொழிகளிலும் இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதன் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசனும், கவுதமியும் நடித்திருந்தனர். தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் உருவான இந்தப்படத்தை மலையாளத்தில் இயக்கிய ஜீது ஜோசப்பே இயக்கியிருந்தார்.

இப்போது இதே படம் சீன மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. சீன மொழியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்துக்கு Sheep Without A Shepherd என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சீன த்ரிஷ்யம் படம் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அண்மையில் இந்தப் படத்தின் ட்ரைலரும் வெளியிடப்பட்டுள்ளது. சீன மொழியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் யாங் சியோ, சுஹோ டன், ஜோன் சென் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். 

இதனையடுத்து மலையாளத்தில் வெளியாகி அதிக மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட படம் "த்ரிஷ்யம்" என்ற பெருமையை பெற்றுள்ளது.