சினிமா

ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட உத்தரகாண்ட் விவசாயி குறித்த ஆவணப்படம் 

ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட உத்தரகாண்ட் விவசாயி குறித்த ஆவணப்படம் 

webteam


உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவரின் வாழ்க்கை போராட்டம் குறித்து எடுக்கப்பட்டுள்ள ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாவ்ரி கர்வால் என்ற கிராமத்தை சேர்ந்த விவசாயி வித்யா தத். விவசாயத்தில் அவர் சந்தித்த போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டு ஆவணப்படம் ஒன்று எடுக்கப்பட்டது. மோதி பாக் என்ற ‌பெயரில் நிர்மல் சந்தர் என்ற இயக்குநர்  எடுத்துள்ள இந்த ஆவணப்படம் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இயக்குனர் நிர்மல் சந்தருக்கு முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கடந்த செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார். மேலும் விவசாயியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள மோதி பாக் படம், இளைஞர்களை தங்கள் கிராமங்களில் தங்கவும், அவர்களின் சமூகங்களுக்காக பணியாற்றவும் ஊக்குவிக்கும் என்று ராவத் கூறினார்.

இந்த திரைப்படம் இளைஞர்களை தங்கள் சொந்த கிராமத்திலேயே தங்கி, சமூகங்களுக்காக பணியாற்ற ஊக்குவிக்கும். குக்கிராமங்களில் இருந்து பலரும் இடம்பெயர்வதை நிறுத்தவும் இந்த திரைப்படம் உதவும்.  இடம்பெயர்வதற்கு எதிராக இளம் விவசாயிகள் பங்காற்ற வேண்டும். மாநில அரசின் சிறப்பு திட்டங்களை எல்லாம் அவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் தெரிவித்துள்ளார்