செல்வராகவன் - மோகன்.ஜி இணையும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
’பழைய வண்ணாரப்பேட்டை’, ’திரெளபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் மோகன் ஜி நடிகர் செல்வராகவனுடன் இணைந்துள்ளார். சமீபத்தில் செல்வராகவனுடன் இருக்கும் புகைப்படத்தினைப் பகிர்ந்து “படத்தின் தலைப்பு மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்” என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவுள்ளது என்றும் இயக்குநர் மோகன்.ஜியே சொந்த பேனரில் தயாரிக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ‘சாணிக்காயிதம்’, ‘பீஸ்ட்’ படங்களில் நடித்துள்ள செல்வராகவன் தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தினையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.