சினிமா

ஓடிடியில் வெளியாகும் ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஓடிடியில் வெளியாகும் ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’: ரிலீஸ் தேதி அறிவிப்பு

sharpana

ராஜமெளலியின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ ரூ.1000 கோடி ரூபாய்க்குமேல் வசூல் சாதனை செய்தது. ஆந்திராவில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான அல்லுரி சீதாராமராஜூ, கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ’ஆர்ஆர்ஆர்’ படத்தை உருவாக்கினார் ராஜமெளலி. 1920 களில் நடக்கும் கதையாக உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் அல்லூரி சீதாராமராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும், கொமரம் பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆரும் நடிப்பில் கவனம் ஈர்த்திருந்தனர். அஜய் தேவ்கான், ஆலியா பட், உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்துள்ளார். ‘ரத்தம் ரணம் ரௌத்தரம்’ எனப்படும் ‘ஆர்.ஆர்.ஆர்.’தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்திய உள்பட 5 மொழிகளில் இதுவரை 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை ஈட்டியுள்ளது.

இதற்கு முன்னதாக ராஜமௌலியின் இயக்கத்தில், பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘பாகுபலி 2’ 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த நிலையில், இந்தப் படமும் அந்த சாதனையை படைத்துள்ளது.இந்த இரண்டு படங்களும் வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது படத்தின் பிரம்மாண்டமும், கதைக்களமும், சி.ஜி. எனப்படும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகளுமே. இப்போதுவரை தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்கு பிறகான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் டிஜிட்டல் உரிமையை மட்டும் ஜீ5 ஓடிடி தளம் கைப்பற்றியிருந்தது. அதன்படி, ‘ஆர்ஆர்ஆர்’ வெளியாகி சரியாக 55 நாட்கள் கழித்து ஜீ5 ஓடிடி தளத்தில் வரும் மே 20 ஆம் தேதி வெளியாகிறது. இதனை அதிகாரபூர்வமாக ஜீ5 தளம் அறிவித்துள்ளது.