சினிமா

“ரஜினியை மற்ற நடிகர்கள் பின்பற்ற வேண்டும்” - விஜய்யை சூசமாக சாடிய ஆர்.வி உதயகுமார்

“ரஜினியை மற்ற நடிகர்கள் பின்பற்ற வேண்டும்” - விஜய்யை சூசமாக சாடிய ஆர்.வி உதயகுமார்

webteam

மேடைகளில் நடிகர்கள் எதார்த்தமாக பேச வேண்டும் என இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் நடிகர் விஜயை மறைமுகமாக சாடியுள்ளார்.

‘உற்றான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஆர்.வி. உதயகுமார், “தமிழை காப்பற்ற போகிறேன் என்பவர்கள் வைக்கும் தமிழ் படத்தின் பெயர் தமிழில் இல்லை. வரி விலக்கிற்காக மட்டும் தமிழை தூக்கி பிடிப்பவர்கள் தமிழர்கள் அல்ல. பேசாத நடிகர் எல்லாம் பேசுகிறார்கள். அறிவுரை கூறுகிறார்கள். முதலில் படத்தின் தலைப்பை தமிழில் வையுங்கள். நானும் அந்த படத்தின் தலைப்பை தேடிப்பார்த்ததலில் அப்படி ஒரு வார்த்தை தமிழிலே இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா தமிழில் பட பெயர் வைக்க வேண்டும் என்பதற்காக வரி விலக்கு அளித்தனர். 

தற்போதைய படங்களில் இரட்டை வார்த்தை வசனங்கள் அதிகம் இடம் பெறுகின்றன. நான் மட்டும் வரிவிலக்கு கமிட்டியில் இருந்திருந்தால் தமிழில் பெயர் வைத்தால் மட்டுமே விலக்கு கொடுப்பேன். மேடைகளில் நடிகர்கள் எதார்த்தமாக பேச வேண்டும். ரஜினிகாந்த் படத்தில் தான் பன்ச் டயலாக் பேசுவார். மேடைகளில் எதார்த்தமாக பேசுவார். மற்ற நடிகர்களும் அதனை பின் பற்ற வேண்டும். எதார்த்தமாக நடந்து கொள்ள வேண்டும். பேனர் வைக்க வேண்டாம் என அறிக்கை வெளியிட்ட அரசியல் கட்சிகள் மற்றும் நடிகர்களுக்கு வாழ்த்துகள். பேனர் வைக்காமல் படம் ஓடினால் தான் அவர் மாஸ் ஹீரோ” என்று கூறினார்.