நடிகர் விக்ரம் நாயகனாக நடித்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான திரைப்படம் தங்கலான். ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் தங்கலான் திரைப்படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடந்தது. இவ்விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். விழாவில் பேசிய பா.ரஞ்சித், “ஞானவேல் மாதிரியான மனிதரை மீட் பண்ணமா இருந்திருந்தா என் திரைப்பயணம் கடினமாக இருந்திருக்கும். அட்டகத்தி படத்தில் அத்தனை பிரச்சனை இருந்தது. படம் பார்த்தவர்கள் எல்லாம் நல்லா இல்லை என சொன்னார்கள். ஞானவேல் ராஜா சார் படம்பாத்துட்டு எப்படியாவது இந்த படத்த ரிலீஸ் பண்ணனும்னு பண்ணார். இதன்பின் பேக் டூ பேக் அந்த நிறுவனத்துக்கு சைன் பண்ணினேன். தங்கலான் படம் ரிலீஸ் ஆக நிறைய பிரச்னை இருந்தது. ஞானவேல் ராஜா சார் கிட்ட ஒரு சந்தேகம் கூட எனக்கு வரல.
இன்னைக்கு காலைல கூட கால் பண்ணார். நீங்க தயாரா இருங்க; பெரிய பட்ஜெட்டில் கமர்ஷியல் படத்துக்கு ரெடியா இருங்க. பெரிய ஹீரோவா கூப்பிட்டு வரனேன்னு ஞானவேல் அண்ணா போன் பண்ணி பேசினார்..
விக்ரம் சார் ஏன் இவ்வளவு நம்புனார்னு தெரியல. அதான் என் பயமே. 58 வயசில இத்தனை இயக்குநர்கள் கிட்ட வேலை செஞ்சு.. இவ்வளவு ரசிகர்கள வச்சிக்கிட்டு ஏன் இப்படி உழைக்கணும்னு நினைச்சேன். இதை கேள்வியா கேட்டேன், அப்போ தான் தெரிஞ்சது ஆர்ட் ரசிகர் மேல வெச்சிருக்குற தீராத லவ் தான். இவர் கடந்து வந்த பாதையில் இருக்குற வேட்கைய தீர்த்திக்க ஓடுறார். என் லைப்ல இப்படியொரு ஆர்டிஸ்ட் கிட்ட வேலை வாங்கினது பெரிய சவாலான விஷயம்.
என்னுடைய அடுத்த படத்தில் பிரம்மிக்க வைக்கக்கூடிய இன்னும் கனெக்ட் ஆக கூடிய சினிமாவை கொடுப்பேன் என்பதுல உறுதியாக இருக்கேன்” என தெரிவித்தார்.