அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு, இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் 'ஜெய்பீம் ஆன்தம்' வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையமும் மெட்ராஸ் ரெக்கார்ட்ஸூம் இணைந்து ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ என்ற இசை நிகழ்ச்சியை கடந்த ஜனவரி மாதம் நடத்தியது. கானா பாடல்களுடன் ராக் மற்றும் ராப் இசையை கலந்து ‘ப்யூஷன்’ வடிவத்தில் உருவாக்கப்பட்ட 20 பாடல்கள் முதல் முறையாக மேடையில் இசைக்கப்பட்டது.
இந்நிலையில், அம்பேத்கரின் 127வது பிறந்தநாளை முன்னிட்டு, நீலம் பண்பாட்டு மையம் சார்பில் 'ஜெய்பீம் ஆன்தம்' வெளியிடப்பட்டுள்ளது. கேஸ்ட்லஸ் கலெக்டிவ் இசைக்குழுவைச் சேர்ந்த கலைஞர்களால் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாடலில், அம்பேத்கரின் சிறப்பு, இன்றைய சூழலில் நிலவும் சாதியம், சமத்துவம் உள்ளிட்டவை குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சி காட்சிகளையும் சேர்த்து 'ஜெய்பீம் ஆன்தம்' பாடல் வீடியோவை உருவாக்கியுள்ளனர்.