சினிமா

அருள்நிதிக்கு அரசியல் கற்றுத்தரும் கரு.பழனியப்பன்!

webteam

பார்த்திபன் கனவு, சிவப்பதிகாரம், சதுரங்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய கரு. பழனியப்பன் ஜன்னல் ஓரம் திரைப்படத்தை இயக்கி நடித்து இருந்தார். தற்போது எழுத்தாளர் சந்திரா இயக்கி வரும் கள்ளன் படத்தில் கரு.பழனியப்பன் நடித்து வருகிறார். அடுத்து அவர் மாதவன் நடிக்க உள்ள படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கரு.பழனியப்பன் இயக்க உள்ள அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அருள்நிதி அறிவித்துள்ளார். அதில் "எனது அடுத்த படத்தை அஷெஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. அரசியல் பற்றி பேசும் இந்த படத்தை கரு.பழனியப்பன் இயக்க இருக்கிறார். அடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்" எனத் தெரிவித்துள்ளார். 

கரு.பழனியப்பன் தனது கருத்துக்களை வெளிப்படையாகவும், நேரடியாகவும் கூறி வருகிறார். அரசியல், தற்போதைய நிலவரங்களை அவர் வெளிப்படையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் இது அரசியல் படம் என அருள்நிதி அறிவித்துள்ளதால், தற்கால அரசியல் நிலவரங்களை மையப்படுத்தி இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அருள்நிதி திமுக தலைவர் கருணாநிதியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.