இயக்குநர் கோபி நயினார் PT
சினிமா

"தன் சொந்த மக்களுக்கு செய்கிற துரோகம்..அமரன் செய்த தவறு இதுதான்" - இயக்குநர் கோபி நயினார் ஆதங்கம்!

அமரன் திரைப்படம் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் நிலையில், இயக்குநர் கோபி நயினார் தன் சொந்த மக்களுக்கு செய்கிற துரோகம் என விமர்சித்துள்ளார்.

PT WEB

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இருவரின் அசாத்தலான நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் ‘அமரன்’.

2014-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள 44-வது ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் பட்டாலியனில் பணிபுரியும் போது, ஷோபியானில் நடந்த காசிபத்ரி ஆபரேஷனில் முக்கியப் பங்கு வகித்து உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் இயக்கப்பட்டுள்ளது.

அமரன்

இந்திய ராணுவ வீரர்களின் தீரம்மிக்க வீரச்செயல்களை அடிப்படையாகக் கொண்டு காஷ்மீரின் சவால் மிக்க நிலப்பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் அமரன் திரைப்படம், முடிந்தளவு உண்மை காட்சிகளை படமாக்க முயற்சித்து அதில் வெற்றியும் கண்டுள்ளது.

ஆனால் காஷ்மீரில் நிலவும் அரசியல் என்ன என்பது குறித்தும், அங்கிருக்கும் மக்களின் வாழ்க்கை சூழல் எப்படி இருக்கிறது என்பது குறித்தும் அமரன் பேசவில்லை எனவும், பேசவில்லை என்பதை விட அங்கிருக்கும் மக்களை தவறாக சித்தரிக்கிறது என்றும் வலியுறுத்தி பல்வேறு விமர்சனங்கள் எழுப்பட்டு, படத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் நடந்துவருகின்றன.

இந்நிலையில் இயக்குநர் கோபி நயினார் எக்ஸ் தள பக்கத்தில் அமரன் படம் குறித்து கடுமையான விமர்சனத்தை வைத்தார். அதனைத்தொடர்ந்து தற்போது புதியதலைமுறையுடன் நேர்காணலில் பங்கேற்ற கோபி நயினார் அமரன் படம் இடம்பெற்ற தவறான விசயங்கள் குறித்து விரிவாக பேசினார்.