சினிமா

சோனி லைவ் ஓடிடியில் வெளியானது ’ஜெய் பீம்’ மணிகண்டன் இயக்கியுள்ள ‘நரை எழுதும் சுயசரிதம்’

சோனி லைவ் ஓடிடியில் வெளியானது ’ஜெய் பீம்’ மணிகண்டன் இயக்கியுள்ள ‘நரை எழுதும் சுயசரிதம்’

sharpana

‘ஜெய பீம்’ நடிகர் மணிகண்டன் இயக்கியுள்ள ‘நரை எழுதும் சுயசரிதம்’ படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

’காதலும் கடந்து போகும்’, ‘காலா’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் மணிகண்டன் சமீபத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ மூலம் இன்னும் புகழ்பெற்றார். நடிகராக அறியப்படும் மணிகண்டனுக்கு திரை எழுத்தாளர் என்ற பின்னணியும் உண்டும். பலப் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளவர், தற்போது ’நரை எழுதும் சுயசரிதம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். அதுவும், முதல் படமே வித்தியாசமான கதைக்களத்தில் உருவாக்கியுள்ளார்.

ஜி&கே வாஹினி புரொடக்‌ஷன்ஸ் சார்பாக ஷஷாங்க் வெண்ணெலகண்டி இப்படத்தை தயாரித்துள்ளார். டெல்லி கணேஷ், மணிகண்டன், மிர்ச்சி விஜய், ஆதவன், ஆர்ஜே சிவச்சங்கரி, ராகெண்டு மவுலி, பிரவீன் ராஜா மற்றும் ஷோபனா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம், வாழ்வின் அழகிய மற்றும் உணர்ச்சிப்பூர்வமான கணங்களின் கோர்வையாக அமைந்து உருவாகியுள்ளது.

ஏற்கனவே, இப்படத்தினை திரைத்துறையினர் பாராட்டியுள்ளனர். சர்வதேச பட விழாக்களிலும் விருதுகளை அள்ளிய நிலையில், இன்று சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. நரை எழுதும் சுயசரிதம்’ படத்திற்கு ஆர்.வசந்தகுமார் ஒளிப்பதிவு செய்ய ரதன் மற்றும் பவன் இசையமைத்துள்ளனர். ராஜேஷ் ராமகிருஷ்ணன் படத்தொகுப்பு செய்துள்ளார்.