சினிமா

தேனாண்டாள் தயாரிப்பில் தனுஷ்?

webteam

மெர்சல் வெற்றியை தொடர்ந்து தேனாண்டாள் நிறுவனம் தனுஷை வைத்து புதிய படத்தை தயாரிக்க உள்ளது.

நடிகர் தனுஷ் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தை ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் சார்பில் முரளி ராமசாமி மற்றும்  ஹேமா ருக்மணி இணைந்து தயாரிக்கவுள்ளதாக ஹேமா தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இதுவரை பெயரிடப்படாத இந்தப் படத்தின் இயக்குநர் மற்றும் நடிக்க இருக்கும் நட்சத்திர பட்டியல் வெகு விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. 

தனுஷ் தற்சமயம் வடசென்னை படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து மாரி2 படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மேலும்  கார்த்திக் சுப்புராஜ்,துரை செந்தில் குமார் இயக்க உள்ள இரு படங்களில் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு தேனாண்டாள் படம் தொடங்குமா? அல்லது அதற்கு முன்பே தொடங்குமா என்பது குறித்து செய்திகள் அறிவிப்பு வந்த பின்பே தெரிய வரும்.