சினிமா

தனுஷ் வழக்கு: அங்க அடையாளங்கள் அழிப்பு

தனுஷ் வழக்கு: அங்க அடையாளங்கள் அழிப்பு

webteam

தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் தங்களின் மூத்த மகன் என உரிமை கோரினர். அதோடு தங்களுக்கு மாதம் 65 ஆயிரம் ரூபாயை வழங்க தனுஷூக்கு உத்தரவிடக்கோரி இருவரும் மேலூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் போது தனுஷின் அங்க அடையாளத்தை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தனுஷின் 10 ஆம் வகுப்பு சான்றிதழ் வெளியிடப்பட்டது. அதில் உள்ள அங்க அடையாளங்களை ஒப்பிட்டு பார்க்க, நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தனுஷ் நேரில் ஆஜரானார். அதனை தொடர்ந்து தனியரையில் 2 அரசு மருத்துவர்கள் அவரின் அங்க அடையாளங்களை சரிபார்த்தனர். இந்த மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணை மார்ச் 27க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.