சினிமா

பிறந்தநாளில் நிச்சயதார்த்தம்: தீபிகா படுகோனே சஸ்பென்ஸ்..!

பிறந்தநாளில் நிச்சயதார்த்தம்: தீபிகா படுகோனே சஸ்பென்ஸ்..!

rajakannan

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனோ தனது 32வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

டென்மார்க்கின் தலைநகர‌மான‌ கோப்பென்ஹாகெனில் உஜ்ஜ‌லா மற்றும் பிர‌காஷ் படுகோனே தம்பதிக்கு 1986-ம் ஆண்டு பிறந்தார். தந்தை பிர‌காஷ் படுகோனே ஒரு புகழ்பெற்ற பால் பேட்மிண்டன் ஆட்டக்கார‌ர். பெங்களூரில் வளர்ந்த தீபிகா, தந்தையைப் போல் முதலில் பேட்மிண்டனில் தீபிகா கவனம் செலுத்தினார்.

பின்னர், க‌ல்லூரியில் ப‌டிக்கும்போது மாடலிங் துறையில் சேர்ந்தார். மாடலிங் துறையில் நீண்ட காலம் பணியாற்றிய அவர், 2006 ஆம் ஆண்டில் முத‌ன் முறையாக ‘ஐஸ்வர்யா’ என்ற‌ ‌கன்னட திரைப்படத்தில் ந‌டித்தார். 2007 இல் ஃபாரா கானின் ‘ஓம் ஷாந்தி ஓம்’ இந்தி ப‌ட‌த்தோடு இந்தியா முழுவ‌தும் அறிமுகம் பெற்றார். நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம், பிலிம் பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை அவருக்கு பெற்று தந்தது.

அதன் பிறகு பாலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். தமிழில் கோச்சடையான் படத்தில் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். ஷாருக்கானும் அவர் நடித்த சென்னை எக்ஸ்பிரஸ் படமும் பரவலாக பேசப்பட்டது. தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள பத்மாவதி படம் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால் கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டதால் படம் இன்னும் வெளியாகவில்லை. இதில் தீபிகாவுக்கு எதிராகவும் பலர் கருத்து தெரிவித்திருந்தனர். தீபிகா தலைக்கு சன்மானமும் அறிவித்தனர்.

இந்நிலையில், தீபிகா படுகோனே தனது 32-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். பாலிவுட்டில் அனுஷ்கா சர்மா-விராட் கோலி ஜோடியை அடுத்து தீபிகா - ரன்வீர் சிங் ஜோடி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பிறந்த நாளான இன்று தீபிகா படுகோனே தனது காதலன் ரன்வீர் சிங் உடன் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாலத்தீவுகளுக்கு சென்றுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. அவர்களது குடும்பத்தினரும் உடன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே மாலத்தீவில் இருந்து இலங்கை செல்லும் செல்லும் தீபிகா - ரன்வீர் ஜோடி அங்கு திருமண நிச்சயதார்த்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் அவர்களாக சொல்லும் வரை எதுவும் உறுதி செய்யப்படாது. பிறந்த நாளிலேயே திருமண நிச்சயதார்த்தம் நடந்தால் தீபிகா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்கும்.