DEADPOOL & WOLVERINE pt web
சினிமா

DEADPOOL & WOLVERINE REVIEW | XMEN ரசிகர்களே.... மிஸ் பண்ணிடாதீங்க!

karthi Kg

இரண்டாம் பாகத்தின் இறுதியில் எல்லா கோட்டையும் அழித்த டெட்பூல் என்கிற வேட் வில்சன் நிம்மதியாய் வாழ்ந்து வருகிறார். விதி அவ்வளவு எளிதாக வேட் வில்சனை இருக்க விடுமா என்ன? TVK.. ச்சை... TVA என்னும் பெயரில் வரும் டைம் வேரியன்ஸ் கும்பல், LOKIVERSEல் வந்தது போலவே இதிலும் வருகிறது.

உலகைக் காப்பாற்ற ஒரு உன்னதமான டாஸ்க்கை டெட்பூலிடம் கொடுக்கிறது. தன்னுடைய அணியில் WOLVERINEஐ சேர்த்துக்கொள்ளும் டெட்பூல், அடுத்தடுத்து செய்யும் அதகளங்களே இந்த மூன்றாம் பாகம்.

படத்தின் பெரும்பலம் ரைட்டிங். வரிக்கு வரி நம்மை சிரிக்க வைத்துவிடுகிறார்கள். இந்த பாகத்தில் ரியான் ரெனால்ட்ஸ் ரைட்டிங் டீமில் இருந்திருக்கிறார். என்ன டேலன்ட் சாமி நீயி..? 20th century Foxல் ஆரம்பித்து, ஃபென்டாஸ்டிக் 4 வரை எல்லோரையும் ஓட்டி எடுத்திருக்கிறார்கள். முதல் பாகம் கொடுத்த அந்த எக்ஸைட்மெண்ட் அடுத்தடுத்த பாகங்களில் இல்லையென்றாலும், குறையொன்றும் இல்லை பேக்கேஜ்தான்.

படத்தின் அடுத்த பலம் சந்தேகமே இல்லாமல் ஹுஹ் ஜேக்மேன்தான். அவரே ஒரு முரட்டு பேக்கேஜ் என்பதால் அதிரடிக்கு கொஞ்சமும் குறையில்லை. கிட்டத்தட்ட 9 முறை வுல்வரினாக அவதரித்துவிட்டார் ஹுஹ் ஜேக்மேன். போதும்டா சாமி என லோகனுடன் கதாபாத்திரத்திற்கு குட்பை சொன்னவர், மீண்டும் இந்த பாகத்தின் ரியான் ரெனால்ட்ஸுடன் இணைந்திருக்கிறார்.

இவர்களுடன் நோவாவாக எம்மா கார்வினும் சேர... ரகளை இன்னும் செம்ம ரகளையாக மாறுகிறது. சீரியஸ் Wolverine வெர்சஸ் கலாய் டெட்பூல் என்பதே முரட்டு காம்போ. இதுபோக படத்தில் ஃபாக்ஸில் இருந்து மொத்தமாய் அள்ளிய கும்பலில் சிலரை இறக்கிவிட்டிருக்கிறார்கள். நமக்கு அப்படியே கடந்து காலத்துக்கு சென்ற வந்த ஃபீலைக் கொடுத்துவிடுகிறார்கள். உன்னையெல்லாம் பாத்து எத்தனை வருசம் ஆச்சு தெரியுமா மோடிலேயே இன்னும் இருக்கிறார் அந்த பீஸ்ட் நடிகர். இது எல்லாவற்றையும் பெரிய சர்ப்பரைஸ் ஒன்று படத்தில் இருக்கிறது.

பொதுவாக டெட்பூல் மாதிரியான படங்களில் தமிழ் டப்பிங் என்றால் வெறும் கெட்ட வார்த்தையை வைத்து நிரப்பியிருக்கப்படும். அப்படியில்லாமல் இதில் கொஞ்சம் சிறப்பாகவே வந்திருக்கிறது.

சாய் அபிஜித் தமிழ் டப்பிங் வசனங்களை எழுதியிருக்கிறார். நல்ல வொர்க் ப்ரோ.

இருந்தாலும் இங்கிலீஷ் வெர்சன் போல் MCU ரெபரென்சஸ் கொஞ்சம் மிஸ்ஸிங்.

Fall guy, Adam project--ஐத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் ஷான் லெவியுடன் கூட்டு சேர்ந்திருக்கிறார் ரியான் ரெனால்ட்ஸ். அது அட்டகாசமாக வொர்க் ஆகியிருக்கிறது. லோகி சீரிஸை நினைவுபடுத்தும் சில காட்சிகளை குறைத்திருக்கலாம் என்பது மட்டுமே குறை.

தமிழ் டப்பிங்கில் வதவதவென கெட்ட வார்த்தைகள் வந்து விழுந்துகொண்டே இருக்கின்றன. படம் முரட்டு A. அதனால், குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு வராமல் இருப்பது நலம். இரண்டாம் பாகத்தைப் போல வேற லெவல் எண்ட் கிரெடிட்ஸ் இல்லை என்றாலும், பழைய நினைவுகளை அசைபோட நல்லதொரு பூட்டேஜை மிட் கிரெட்ஸாக வைத்திருக்கிறார். XMEN ரசிகர்கள் டோன்ட் மிஸ் இட்..!

நண்பர்களுடன் ஜாலியாக சென்று வீக்கெண்டைக் கொண்டாட ரகளையானதொரு படம் இந்த டெட்பூல் & வுல்வரின்