சினிமா

'இதுபோன்ற திரைப்படங்கள் தமிழில் ஏன் வருவதில்லை' - இளையராஜா பேச்சு

'இதுபோன்ற திரைப்படங்கள் தமிழில் ஏன் வருவதில்லை' - இளையராஜா பேச்சு

JustinDurai

'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' போன்ற திரைப்படங்கள் தமிழில் ஏன் வருவதில்லை என்று எண்ணியதாக இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.

ஈரானிய மொழியில் 1997-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றியடைந்த திரைப்படம் 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்'. தற்போது இந்த படத்தை 'அக்கா குருவி' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளார் இயக்குநர் சாமி. இசையமைப்பாளர் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில், இந்த திரைப்படம் குறித்து இளையராஜா பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். 'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' படம் தனக்கு வியப்பை ஏற்படுத்தியதாகவும், அந்த படத்தை பார்த்த பிறகு, இது போன்ற திரைப்படங்கள் ஏன் இங்கு வருவதில்லை என்ற எண்ணம் தோன்றியதாகவும் கூறியுள்ளார்.

'சில்ட்ரன் ஆஃப் ஹெவன்' படத்தின் சாராம்சம் மாறாமல், நமது கலாசாரத்திற்கு ஏற்றவாறு மிகவும் சுவாரஸ்யமாக சாமி இயக்கியிருப்பதாகவும் இளையராஜா தெரிவித்துள்ளார். 'அக்கா குருவி' திரைப்படம் மே 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதையும் படிக்கலாம்: ‘இளையராஜா 5 பாரத ரத்னாவுக்கு தகுதியானவர்’ - ‘அக்கா குருவி’ இசை வெளியீட்டில் அமீர்