நடிகர் சங்கம் vs தயாரிப்பாளர் சங்கம் முகநூல்
சினிமா

நடிகர் சங்கம் vs தயாரிப்பாளர் சங்கம் முற்றிய மோதல்! காரணம் என்ன?

தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்துக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பேசுபொருளாகியுள்ளது. நடந்தது என்ன? விரிவாக பார்க்கலாம்.

PT WEB

செய்தியாளர்: சனா

தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கத்துக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பேசுபொருளாகியுள்ளது. நடந்தது என்ன? விரிவாக பார்க்கலாம்.

தயாரிப்பாளர் சங்கம் நேற்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், தனுஷ் பல தயாரிப்பாளிடம் அட்வான்ஸ் பெற்றிருக்கும் நிலையில் இனிவரும் காலங்களில் புதிய திரைப்படங்களில் தனுஷை கமிட் செய்யும் போது கலந்து ஆலோசிக்க வேண்டுமென என தெரிவித்திருந்தது. ஆகஸ்ட் 16 முதல் புதிய திரைப்படங்களில் தொடங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டுமென கேட்டிருந்தது.

மேலும், நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஷூட்டிங் நடக்காது எனவும் அறிவித்திருந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக மாலை நடிகர் சங்க கூட்டம் நடந்தது. கார்த்தி, பூச்சி முருகன், கருனாஸ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். இவர்கள் தயாரிப்பாளர் சங்க அறிக்கைக்கு தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.

அப்போது பேசிய கார்த்தி, தனுஷ் மீது நடிகர் சங்கத்தில் எந்த புகாரும் அளிக்கப்படவில்லை என்றும், ஷுட்டிங் நிறுத்திப்பட்டால் பல தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். நடிகர் சங்கத்தை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுத்த முடிவை வன்மையாக கண்டிப்பதாக நடிகர் கருணாஸ் கூறினார்.

மேலும், நடிகரின் ஒரு படம் ஹிட்டானவுடன், அட்வான்ஸ் கொடுத்து நடிகர்களை புக் செய்வதே தயாரிப்பாளர்கள் செய்யும் தவறு என பத்திரிகையாளர் சுகுணா திவாகர் தெரிவித்தார். ஆனால், இந்த இரண்டு சங்கங்கள் எடுக்கும் முடிவுகளால் அதிகம் பாதிக்கப்படுவது கடைநிலை தொழிலாளர்கள் தான். இதனால் சுமுகமாக தீர்வு வர வேண்டுமென சினிமா ஆர்வலர்கள் விரும்புகின்றனர்.