இந்திய சினிமாவின் மாபெரும் ஒளிப்பதிவாளர் அசோக் குமாரின் நினைவு தினம் இன்று., தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் சுமார் 125 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக இவர் பணியாற்றியுள்ளார்.,
இயக்குனர் மகேந்திரன் இயக்கத்தில் இவர் ஒளிப்பதிவு செய்த உதிரிப்பூக்கள், ஜானி போன்றவை இவரது அசல் உழைப்பிற்கு உதாரணம்., உதிரிப்பூக்கள் படத்தில் வரும் “அழகிய கண்ணே உறவுகள் நீயே…” பாடல் அசோக்குமாரின் ஒளிப்பதிவில் அத்தனை இதம்.
உதிரிப்பூக்கள், ஜானி, நண்டு, நெஞ்சத்தைக் கிள்ளாதே என மகேந்திரன் அசோக்குமார் கூட்டணியில் வெளியான எல்லா படங்களும் கொண்டாடப்பட்டது. அதில் நெஞ்சத்தைக் கிள்ளாதே அசோக்குமாருக்கு தேசிய விருதை பெற்றுத் தந்தது.
இந்திய சினிமாவின் முதல் 3D குழந்தைகள் திரைப்படமான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ படத்தின் ஒளிப்பதிவாளர் என்ற பெருமை அசோக்குமாருக்கு உண்டு.
இவை தவிர காளி, வெற்றிவிழா, மன்னன், உல்லாசப்பறவைகள் என பல திரைப்படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குனர் சங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் இவரது ஒளிப்பதிவு முக்கியப்பங்கு வகித்தது.
கலைப்படைப்புகள் கமர்சியல் சினிமாக்கள் என எந்த விதமான கதையானாலும் தனது தனித்துவமான ஒளிப்பதிவு பாணியால் இந்திய சினிமாவில் அழுத்தமான தனது பதிவுகளை விட்டுச் சென்றவர் அசோக்குமார்.