சினிமா

26-ம் தேதி சினிமா ஷூட்டிங் ரத்து

webteam

 வரும் 26-ம் தேதி சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. 

தென்னிந்திய திரைப்படம் மற்றும் சின்னத்திரை சண்டை இயக்குனர்கள், சண்டை கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா வரும் 26-ம் தேதி சென்னையில் கொண்டாடப்பட இருக்கிறது. இதில் சினிமாதுறையினர் அனைவரும் கலந்து கொள்வதற்கு வசதியாக அன்றைய தினம் அனைத்து படப்பிடிப்புகளையும் ரத்து செய்யுமாறு சண்டை இயக்குனர்கள் சங்கம் சார்பில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஆகஸ்ட் 26-ம் தேதி ஒருநாள் மட்டும் படப்பிடிப்புகள் ஏதும் நடக்காது என்று தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கூறப்பட்டுள்ளது.