சினிமா

சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் இன்று திரையிடப்படும் ‘அக்கா குருவி’!

சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் இன்று திரையிடப்படும் ‘அக்கா குருவி’!

webteam

சென்னை சர்வதேச திரைப்படவிழாவில் ‘அக்கா குருவி’ திரைப்படம் இன்று திரையிடப்படுகிறது.

உலக புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி இயக்கி 1997-ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு போட்டி போட்ட படம் 'சில்ரன் ஆஃப் ஹெவன்'. இப்படம் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளை வெகுவாக ஈர்த்தது. பல விருதுகளையும் வாரிக்குவித்தது.

இப்படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குநர் சாமி 'அக்கா குருவி' என்ற பெயரில் இயக்கியிருக்கிறார். இவர் ஏற்கனவே 'உயிர்', 'மிருகம்' மற்றும் 'சிந்து சமவெளி' போன்ற படங்களை இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்திருக்கும் ‘அக்கா குருவி’ படத்தில் மாஹின் என்ற சிறுவனும், டாவியா என்ற சிறுமியும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கிளாசிக்கல் டான்ஸரான தாரா ஜெகதாம்பா அம்மா கதாபாத்திரத்திலும், செந்தில்குமார் அப்பா கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

இப்படம் இன்று சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. இன்று மதியம் 3 மணிக்கு இப்படம் சத்யம் திரையரங்கின் செரின் ஹாலில் திரையிடப்பட உள்ளது.